41வது திருமணநாள்.. வீட்டின் முன் காத்திருந்த ரசிகர்களுக்கு காட்சி தந்த ரஜினிகாந்த்..வேறலெவல் வீடியோ!

சென்னை: நடிகர் ரஜினிகந்த் - லதா ரஜினிகாந்த் தம்பதியினரின் 41வது திருமண நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த்தின் திருமண நாளை முன்னிட்டு காலையில் இருந்தே அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அண்ணாத்த படத்தை முடித்த கையுடன் நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் திருமணம்

ரஜினிகாந்த் திருமணம்

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா ரஜினிகாந்தின் 41வது திருமணநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி பின்னணி பாடகி லதாவை திருமணம் செய்து கொண்டார். இத்தனை ஆண்டுகளும் இருவரும் சந்தோஷமாக தங்களது குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

41வது திருமணநாள்

41வது திருமணநாள்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இருவருக்கும் திருமணமாகி 41 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தம்பதியினருக்கு ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ரசிகர்களுடன் சந்திப்பு

ரசிகர்களுடன் சந்திப்பு

திருமண நாளை முன்னிட்டு ரஜினிகாந்தை சந்திக்க அவரது இல்லத்தின் முன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வீட்டில் இருந்து எட்டிப் பார்த்தபடி கை கூப்பி வணக்கம் வைத்தார் நடிகர் ரஜினிகாந்த். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. ரஜினிகாந்தை பார்த்த உற்சாகத்தில் அவருக்கு ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

சங்கடத்தில் ரஜினிகாந்த்

சங்கடத்தில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிந்த நிலையில், சங்கடத்தில் ஆழ்ந்த ரஜினிகாந்த் அவருக்கு விசாகனுடன் இரண்டாவது திருமணத்தை செய்து வைத்தார். ஆனால், சமீபத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை பிரிந்த நிலையில், மீண்டும் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளார் ரஜினிகாந்த் என தகவல்கள் வெளியாகின.

தலைவர் 169

தலைவர் 169

பீஸ்ட் படம் வெளியானதும் தலைவர் 169 படத்துக்கான ஷூட்டிங்கை இயக்குநர் நெல்சன் துவங்கி விடுவார் எனக் கூறப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள அந்த படத்தையும் அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X