twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னை நெஞ்சார வாழ்த்திய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி... ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

    |

    சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு இடத்தை பிடித்து மாஸ் நடிகராக உள்ளார்.

    வசூலில் மன்னனாக வலம் வரும் ரஜினிகாந்துக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு ரசிகர்களை அதிகம் பெற்ற ரசிகர் என்ற பெருமையை பெற்றவர் ரஜினிகாந்த்.

    ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது

    ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது


    நாட்டின் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

    வாழ்நாள் சாதனைக்காக

    வாழ்நாள் சாதனைக்காக


    இந்நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணை தலைவர், வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருதை வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்தின் வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

    பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்

    பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்

    விருதை பெற்ற பிறகு பேசிய ரஜினிகாந்த், தனக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி கூறினார். மேலும் இந்த விருதை தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் கூறினார்.

    வாழ வைக்கும் தெய்வங்களான

    வாழ வைக்கும் தெய்வங்களான

    மேலும் தன்னை அடையாளம் காட்டிய தனது நண்பர் பகதூருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறினார். ரசிகர்கள் மற்றும் தன்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்றும் கூறினார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்திலும் நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.

    இதயப்பூர்வமான நன்றி

    இதயப்பூர்வமான நன்றி

    அவர் பதிவிட்டிருப்பதாவது, என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி என பதிவிட்டுள்ளார்.

    குவியும் லைக்ஸ்

    குவியும் லைக்ஸ்

    நடிகர் ரஜினிகாந்தின் இந்தப் பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் அதிகம் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.
    தாதா சாகேப் பால்கே விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே பாலச்சந்தர் ஆகியோருக்கும் இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rajinikanth says thanks to people who wished him for reciving the Dadasahep Phalke award. Rajinikanth tweeted My heartfelt thanks to the political leaders, government officials, friends of all departments, fans and people who greeted me heartily.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X