புகழுக்கு ரஜினி கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்... நெகிழ்ந்து போன புகழ்

சென்னை : விஜய் டிவி.,யில் மிகவும் பிரபலமான ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. காமெடி, சமையல் நிகழ்ச்சியான இதன் இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் எப்போது துவங்குவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி இரண்டு சீசன்களிலும் காமெடி செய்து கலக்கியவர் புகழ். ரம்யா பாண்டியன் மற்றும் பவித்ரலட்சுமியுடனான இவரது ரொமான்ஸ், சிவாங்கி உடனான காமெடி இந்த நிகழ்ச்சியின் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த பெரிய அளவிலான வரவேற்பால் அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

டாப் ஹீரோக்கள் படங்கள்

டாப் ஹீரோக்கள் படங்கள்

விஜய் நடிக்கும் பீஸ்ட், அஜித் நடித்துள்ள வலிமை, சந்தானம் நடித்துள்ள சபாபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போதும் கிட்டதட்ட அரை டஜன் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் புகழ். இந்த படங்கள் பலவும் பெரிய நடிகர்களின் படங்கள், அடுத்தடுத்து ரிலீசாக உள்ள படங்கள் என்பதாலும் பெரிய திரையிலும் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்தநாள் கொண்டாடிய புகழ்

பிறந்தநாள் கொண்டாடிய புகழ்

புகழ், நேற்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடினார். பவித்ரலட்சுமி உள்ளிட்ட குக் வித் கோமாளி டீமை சேர்ந்த நண்பர்கள் பலர் புகழின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். புகழின் பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி

சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி

இதில் புகழுக்கு பிறந்தநாள் சர்ப்ரைசாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புகழுக்கு வாழ்த்து கூறி வாய்ஸ் நோட் ஒன்றை அனுப்பி உள்ளார். இதற்காக நன்றி தலைவா என இன்ஸ்டாகிராம் போஸ்ட் செய்துள்ளார் புகழ். ரஜினி தனக்கு வாழ்த்து அனுப்பியதை உணர்ச்சி பொங்க அவர் கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Recommended Video

Annathe படத்தை Fans-வுடன் பார்த்த Dhanush | Annathe Audience Opinion
ரசிகனாக இருப்பதே பெருமை

ரசிகனாக இருப்பதே பெருமை

புகழ் தனது கேப்ஷனில், என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. என் தலைவன் வாழ்த்துக்களோட இந்த நாள நான் தொடங்கறேன். திரை உலகிற்கு வருவதற்கே அவர் ஒரு ரோல் மாடல் எனக்கு. அப்படி அவர பார்த்து ரசிச்சு வளர்ந்த எனக்கு அவர் வாயால வாழ்த்து சொல்லி இருக்கிற மகிழ்ச்சிய எப்படி வெளிப்படுதறதுனு தெரியல. இப்படி ஒருநாள் என் வாழ்க்கைல வரும்னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்லை. நான் எந்த இடத்துக்கு போனாலும், அவருக்கு இருக்கிற ரசிகர்கள்ல நானும் ஒருத்தன் அது தான் எனக்கு பெருமை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அன்பும், நன்றிகளும் மக்களே என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X