Don't Miss!
- News
பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்.. அதிமுகவை பின்னுக்கு தள்ள முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
- Sports
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்.. ரசிகர்களுக்கு பிசிசிஐ தந்த மெகா சர்ஃப்ரைஸ்.. வரலாற்று தொடராக மாறுகிறது
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எம்பி.,யான இளையராஜா...அன்பாக வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்
சென்னை : இளையராஜா, இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் விளங்குகிறார்.அன்னக்கிளி திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
Recommended Video
இவருக்கு, இந்திய அரசின் பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.2018 ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

இசையில் பல சாதனைகள்க படைத்து, இசையின் ராஜாவாக திகழும் இளையராஜா, உலகம் முழுவதிலும் உள்ள இசை பிரியர்களின் மனதில் கடவுளாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இந்திய அரசு மாநிலங்களவையின் கெளரவ எம்பி பதவி வழங்கி உள்ளது.
இதற்காக இளையராஜாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் வாழ்த்து பகிர்ந்து நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தும் வாழ்த்து தெரிவித்துள்ளர். ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா மற்றும் ராஜமெளலியின் அப்பாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி.. மோடி பாராட்டு!
சினிமாவை தாண்டி, ஆன்மிக ரீதியாகவும் இளையராஜா- ரஜினி இடையே பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. ரஜினி, தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இளையராஜாவின் வீட்டிற்கு சென்று ஆன்மிகம் தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கொரோனா காரணமாக இமயமலை செல்ல முடியாததால் சமீபத்தில் குட இளையராஜாவின் வீட்டிற்கு சென்ற ரஜினி, இளையராஜாவின் பேரக்குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். பிறகு இளையராஜாவுடன் அவரது ஸ்டுடியோவிற்கும் புறப்பட்டு சென்று, அங்கு நடந்த இசைக்கச்சேரியின் ஒத்திகையை கேட்டு மகிழ்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் வெளியாகி செம வைரலாகின.