»   »  எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள்: ரஜினி வேதனை

எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள்: ரஜினி வேதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
அரசியலுக்கு வருவது உறுதி... ரஜினியின் பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழகத்தில் நடப்பதை பார்த்து பிற மாநில மக்கள் சிரிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் இனிப்பு வழங்கி அதை கொண்டாடி வருகிறார்கள்.

ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது,

ஜனநாயகம்

ஜனநாயகம்

அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சுங்க. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சு. ஜனநாயகம் சீர் கெட்டுப் போச்சு. கடந்த ஓராண்டு காலமாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் மக்களை தலைகுனிய வைத்துவிட்டது. எல்லா மாநிலத்து மக்களும் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவு

முடிவு

இந்த நேரத்தில் நான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால், என்னை வாழவைத்த தமிழ்நாடு மக்களை வாழ வைக்க நல்ல முடிவை எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு நான் சாகும் வரை இருக்கும்.

மாற்றம்

மாற்றம்

சிஸ்டமை மாற்ற வேண்டும். அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்தாச்சு. ஜனநாயகப் போரில் நம் படை இருக்கும். ஒரு கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பது சாதாரண விஷயம் இல்லை என்பது எனக்கு தெரியும். கடலில் முத்து எடுப்பது போன்று ஆகும். ஆண்டவனின் அருள், மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.

கொள்ளை

கொள்ளை

ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சிக்கு வரும் கட்சிக்காரங்க மக்களை பல விதத்தில் கொள்ளையடிக்கிறார்கள். சொந்த மக்களிடமே கொள்ளையடிக்கிறார்கள். இதை நாம் மாற்ற வேண்டும். தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசைபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றார் ரஜினிகாந்த்.

English summary
Rajinikanth has announced that he is going to float a new party and will contest in the TN assembly election. His fans are so happy and are celebrating his announcement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X