Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொன்னியின் செல்வனை பாராட்டிய ரஜினிகாந்த்.. நெகிழ்ந்து போன ஜெயம் ரவி.. என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு இன்னமும் ரஜினிகாந்த் எந்தவொரு வாழ்த்தும் சொல்லவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஜெயம் ரவியின் இந்த ட்வீட் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.
முதல் பாதி முழுவதும் ஜெயம் ரவி வரவில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அந்த
அரியணையை
ஐஸ்வர்யா
ராய்
பார்க்கும்
காட்சி..
பொன்னியின்
செல்வனை
சிலாகித்த
சிவகார்த்திகேயன்!

அருள்மொழி வர்மனாக
பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். டைட்டில் நாயகனே இவர் தான் என்றாலும், படத்தில் இண்டர்வெலுக்கு பிறகு தான் இவரது காட்சிகள் கதையில் வருவதை போலவே வருகின்றன. ஆனால், இரண்டாம் பாகம் முழுவதும் ஜெயம் ரவியின் பங்கு அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டிய பாட்டி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜெயம் ரவியின் நடிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர். கதையில் படித்த பொன்னியின் செல்வன் அப்படியே திரையில் வந்து விட்டாரே என ஜெயம் ரவியின் நடிப்பை பார்த்து பலரும் மெய்சிலிர்த்து போயுள்ளனர். இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்தும் ஜெயம் ரவிக்கு கிடைத்துள்ளது.

தேங்க்யூ தலைவா
நடிகர் ஜெயம் ரவிக்கு போன் செய்து பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரஜினிகாந்த் வாழ்த்தி பேசிய அந்த ஒரு நிமிடம் தனது நாளை மேலும் சிறப்பாக்கி விட்டது என்றும் அது என் கரியருக்கு புதிய அடையாளத்தை அளித்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், தேங்க்யூ தலைவா குழந்தையை போல ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டு நீங்கள் என்னையும் நான் நடித்த படத்தையும் பாராட்டியதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வனை குறிப்பிடல
ஆனால், ஜெயம் ரவி குறிப்பாக தனது ட்வீட்டில் எங்கேயும் பொன்னியின் செல்வன் என்கிற வார்த்தையே வராமல் இப்படியொரு ட்வீட்டை போட்டிருக்கும் நிலையில், பொன்னியின் செல்வனை பார்த்து விட்டுத் தான் ரஜினி பாராட்டினாரா? ஏன் எங்கேயும் பொன்னியின் செல்வன் ஹாஷ்டேக்கையோ, அந்த படத்தின் டைட்டிலையோ குறிப்பிடவில்லை என சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன் தானே அதை பற்றித் தான் அவர் சொல்கிறார் என்றும் அவரது ரசிகர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.