twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூன்று முகத்துக்கு எப்பவுமே மவுசு இருக்கு.. நாளை பிரான்ஸ் திரையரங்கில் அலெக்ஸ்பாண்டியன் தரிசனம்!

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூன்று முகம் திரைப்படம் நாளை பிரான்ஸ் திரையரங்கில் வெளியாகிறது.

    அன்லாக்டவுன் 3.0 இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தியேட்டர்கள் திறக்கப்படும் என திரையுலகினரும் தியேட்டர் அதிபர்களும் ரொம்பவே எதிர்பார்த்தனர்.

    Rajinikanth starrer Moondru Mugan will release on France

    ஆனால், கொரோனா அச்சம் காரணமாக இறுதியில் ஆகஸ்ட் மாதமும் தியேட்டர்கள் திறக்கப்படாது என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

    ஆனால், கொரோனா பரவல் எல்லாம் கட்டுக்குள் வந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், நாளை, ஆகஸ்ட் 2ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1982ம் ஆண்டு வந்த காப் ஸ்டோரி படமான மூன்று முகம் Gaumont Saint-Denis திரையரங்கில் மாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது.

    முன்னதாக தியேட்டர்கள் கடந்த மாதம் அங்கு தொடங்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் தர்பார் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

    கர்நாடகாவிலும் தலயின் சாம்ராஜ்யம்.. டிஆர்பியில் சாதனை படைத்த விஸ்வாசம் !கர்நாடகாவிலும் தலயின் சாம்ராஜ்யம்.. டிஆர்பியில் சாதனை படைத்த விஸ்வாசம் !

    இந்நிலையில், நாளை டிஜிட்டல் வெர்ஷனில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ள ரஜினிகாந்தின் மூன்று முகம் படம் வெளியாகிறது.

    இதனை பார்க்க பிரான்ஸ் நாட்டில் உள்ள ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Rajinikanth evergreen cop story Moondru Mugam have a re-release in France theater. After unlockdown in France, many theaters started running.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X