twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்!

    மீ டூ விவகாரம் தொடர்பாக ரஜினி பதிலளித்துள்ளார்

    |

    சென்னை: மீ டூ விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம், சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    Rajinikanth statement on metoo movement!

    பல கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நிறைவுற்றது. இதையடுத்து ரஜினிகாந்த் சென்னை வந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    சபரிமலை பிரச்சனை தொடர்பாக ரஜினியிடம் கேட்கப்பட்டதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அதே நேரம் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும். காலம் காலமாக உள்ள சம்பிரதாயத்தை மாற்றுவது முறையானது அல்ல. கோவிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக்கூடாது. மதம் சார்ந்த விஷயங்களில் பார்த்து செய்ய வேண்டும். என்று தெரிவித்தார்.

    பெரும் புயலைக் கிளப்பியுள்ள மீடூ விவகராம் பற்றிக் கேட்கப்பட்டதற்கு, அது பெண்களுக்கு சாதகமானதாக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். அதே நேரத்தில் மீடூ என்பதை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.

    மேலும், ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று கட்சி துவங்கப்படுமா எனக் கேட்டதற்கு, கட்சி ஆரம்பிப்பதற்கான 90% பணிகள் முடிந்துவிட்டதாகவும், டிசம்பர் 12ல் கட்சியை அறிவிப்பேன் என வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவித்தார்.

    English summary
    Rajinikanth stated as women don’t misuse metoo movement.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X