1000 கோடி எடுக்க போராடும் ரஜினிகாந்த் படம்.. 1200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமெளலி படம்!

சென்னை: 600 கோடி ரூபாய் மார்க்கெட்டை லியோ படத்தின் மூலம் கொண்டு வந்த லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிடைத்தால் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அசால்ட்டாக கொடுக்காமல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எல்லாம் தன்னால் படம் எடுக்க முடியாது என்றும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி எல்லாம் தயாரிப்பாளருக்குத்தான் என பேசுவது சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

74 வயதில் உலகம் முழுவதும் முதல் 4 நாட்களில் சுமாரான படத்தின் மூலமே பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுக்கக் கூடிய ரஜினிகாந்த் படம் என்றால் சம்பளம் வாங்காமலே அமீர்கான் நடிக்க சம்மதிக்கிறார். நாகார்ஜுனா வில்லனாக முதன்முறையாக நடிக்கிறார். சத்யராஜ் பழைய பகையை எல்லாம் மறந்துவிட்டு நண்பனாக நடித்துள்ளார். செளபின் சாஹீர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், நித்யா ராம், பூஜா ஹெக்டே என ஏகப்பட்ட பேரை வைத்துக் கொண்டு புல்ஸ் ஐ அடிக்க முடியவில்லை என்றால் எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Rajinikanth struggling for 1000 Crore Box Office Rajamouli creates SSMB29 movie with 1200 Budget
Photo Credit:

பல வருடங்களுக்கு முன்பே பிரபாஸை வைத்து பாகுபலி 2 படத்தின் மூலம் 1800 கோடி வசூலை கொடுத்து டோலிவுட் சினிமாவை பாலிவுட்டை தாண்டி முன்னிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ள ராஜமெளலி அடுத்து 1200 கோடி பட்ஜெட்டில் மகேஷ் பாபுவின் SSMB 29 படத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1200 கோடி பட்ஜெட்: மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகும் பிரமாண்ட படத்தை இயக்குநர் ராஜமெளலி உருவாக்கி வருகிறார். வரும் நவம்பர் மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மகேஷ் பாபுவின் கழுத்தில் சாமி டாலர்கள் அணிந்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால், அதில், மகேஷ் பாபுவின் முகம் காட்டப்படவில்லை. 2 பாகங்களாக இந்த படம் உருவாகப்போவதாகவும் 1200 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Rajinikanth struggling for 1000 Crore Box Office Rajamouli creates SSMB29 movie with 1200 Budget
Photo Credit:

120 நாடுகளில்: ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படம் 120 நாடுகளில் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்து கடுமையாக உழைத்து வருவதாகவும் ஹாலிவுட் படங்கள் போல பான் வேர்ல்ட் வெற்றியை பெறவே ராஜமெளலி திட்டமிட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X