Just In
- 4 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 5 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 7 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 9 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா?
சென்னை: அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவர் ரசிகர்கள் பல வருடங்களாக கூறி வருகின்றனர்.
அதற்கேற்றபடி அவரும் அது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது என்று கூறி வந்தார்.

வருவது உறுதி
இந்நிலையில், கடந்த 2017 ஆம் வருடம் ரசிகர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார். ஆனால், அவ்வப்போது அரசியல் கருத்துக்களை கூறி வந்த அவர், எப்போது அரசியல் கட்சி தொடங்குவார், கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

சிறுநீரக பாதிப்பு
இந்நிலையில், அக்டோபர் மாதம் ரஜினி பெயரில் பரபரப்பு அறிக்கை வெளியானது. அதில், ‘அக்டோபர் 2 ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சி பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். கொரோனா பிரச்சினை காரணமாக, யாரையும் சந்திக்க முடியவில்லை. 2011 ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன்.

தவிர்க்க வேண்டும்
அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தேன். அரசியலில் ஈடுபடலாமா என்று டாக்டர்களிடம் கேட்டபோது, அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றனர். எனவே அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களும், ரசிகர்களும் என்ன முடிவு எடுக்க சொல்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது.

அரசியல் நிலைப்பாடு
இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் என் உடல் நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரை குறித்த தகவல்கள் உண்மைதான். இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.

ரசிகர்கள் குழப்பம்
இதனால், அவர் அரசியல் கட்சியை ஆரம்பிப்பாரா? மாட்டாரா? என்று அவர் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை, சென்னை வரும்படி ரஜினி அழைத்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரம்
இதில் நிர்வாகிகளுடன் ரஜினி வீடியோ மூலம் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.