வசூல் முக்கியமில்லை.. பாராட்டுற மாதிரி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி, விஜய், அஜித்?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் நாயகர்களான ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித்தின் சமீபத்திய படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், ரசிகர்கள் அவர்களிடம் இருந்து ரியல் பிளாக்பஸ்டர் படங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த, இந்த ஆண்டு பொங்கலுக்கு வந்த அஜித்தின் வலிமை மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான விஜய்யின் பீஸ்ட் என மூன்று படங்களுமே வசூல் ரீதியாக தப்பித்தாலும், விமர்சன ரீதியாகவும் குறிப்பாக ரசிகர்களை கவரும் விதமாகக் கூட கொடுக்கலையே ஏன் என்கிற கேள்வி தான் எழுந்துள்ளது.
இதுவரை நடித்து வந்த ஜானர்களில் இருந்து மூவருமே வித்தியாசப்பட முயற்சித்த நிலையில், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது தான் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

ரஜினியின் அண்ணாத்த
தமிழ் சினிமாவில் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். தனது 40 வருடத்திற்கும் மேலான சினிமா வாழ்க்கையில் எத்தனையோ பிளாக்பஸ்டர் படங்களையும், சிறந்த நடிப்பால் அசத்திய படங்களையும் கொடுத்துள்ளார். ஆனால், அவர் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் அடுத்தடுத்து ஃபிளாப் ஆன நிலையில், தலைவர் 169 படத்தை கண்டிப்பாக வெற்றிப் படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அஜித்தின் வலிமை
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் ரேஸில் இருந்து ஒதுங்கிய நிலையில், நீண்ட காத்திருப்புக்கு பின்னர் வெளியான வலிமை திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. ஆனால், படம் தரமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரசிகர்களையும் பெருவாரியாக வலிமை திருப்திப்படுத்த தவறியது. அதன் காரணமாக ஃபர்ஸ்ட் டே கலெக்ஷன் ரெக்கார்டு அடுத்தடுத்த நாட்களில் அப்படியே குறையத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதே இயக்குநர்
வலிமை படம் விமர்சன ரீதியாக வெற்றியடையாத நிலையிலும், மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்திலேயே பேங்க் ஹெய்ஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். அந்த படத்துக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். வெறித்தனமான ஒரு வெற்றியை பதிவு செய்வார் நடிகர் அஜித் என அவரது ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பீஸ்ட் நிலைமை
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வந்த நடிகர் விஜய்யும் ரசிகர்களுக்கு செம ஜாலியாக ஒரு படத்தை கொடுக்கலாம் என டார்க் காமெடி படத்தை இயக்கி ஹிட் கொடுத்த வந்த நெல்சன் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்தார். ஆனால், இந்த முறை துண்டு தவறிடுச்சு என்பது போல பீஸ்ட் படம் சர்வதேச அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அடுத்ததாகவும் குடும்ப ரசிகர்களை கவர் பண்ணும் முயற்சியில் வம்சி உடன் இணைந்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்டென்ட் முக்கியம்
ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்டவர்களின் ஸ்டார்டாம் காரணமாக வசூல் ரீதியாக வெற்றி பெற முடியும். ஆனால், அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் படங்கள் மிகப்பெரிய ஈர்ப்பை ரசிகர்கள் மத்தியில் பெறாததற்கு ஒரே காரணம் தான் அது அந்த படங்களின் கன்டென்ட் தான் எனக் கூறுகின்றனர். ஸ்க்ரீன்பிளேவில் இயக்குநர்கள் சொதப்புவது தான் இந்த நிலைமைக்கு காரணம் என்கின்றனர்.

பாராட்டும் படம்
சிவகார்த்திகேயனின் டான் படத்தை பார்த்து அழுது விட்டேன் என ரஜினிகாந்த் பாராட்டியது மிகப்பெரிய விஷயம். அதே போல ரஜினிகாந்த், விஜய், அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் மக்களின் பாராட்டுக்களையும், பிரபலங்களின் பாராட்டுக்களையும் அள்ளி பக்கத்து ஸ்டேட் படங்கள் சாதித்த சாதனைகளை தவிடு பொடியாக்குமா? என்கிற கேள்வியும் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகர்களிடமும் உள்ளன.


Click it and Unblock the Notifications











