»   »  அமெரிக்காவில் குரு சச்சிதானந்தா ஆசிரமத்தில் ரஜினிகாந்த்!

அமெரிக்காவில் குரு சச்சிதானந்தா ஆசிரமத்தில் ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

யோகாவில்லே(வர்ஜீனியா): ஓய்வுக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள தனது குரு சச்சிதானந்தாவின் ஆசிரமத்துக்குப் போய் வழிபட்டார்.

கடந்த மே மாதம் 2.ஓ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். ஓய்வுக்காகவும், 2.ஓ படத்தின் சில சோதனைகளுக்காகவும் அவர் அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது.

ஆனால் ஊடகங்களில் கடந்த இரு மாதங்களாக பல்வேறு விதமான யூகங்களை செய்திகளாக வெளியிட்டு வந்தனர். அவருக்கு உடல் நிலை சரியில்லை, சிறுநீரகக் கோளாறு, மருத்துவமனையில் சிகிச்சை என்றெல்லாம் எழுதி வந்தனர்.

Rajinikanth visits Lotus Ashram at Virginia on Sunday

ஆனால் இதுகுறித்து ரஜினி குடும்பத்தினர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ரஜினி நலமுடன் ஓய்வெடுத்து வருகிறார் என்று மட்டும் கூறினர்.

இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி சென்னை திரும்புவதாகக் கூறினர். ஆனால் அவர் இந்த வாரம்தான் சென்னை திரும்புகிறார்.

Rajinikanth visits Lotus Ashram at Virginia on Sunday

அவர் கடந்த சில தினங்களாக தனக்குப் பிடித்தமான, வர்ஜீனியாவின் யோகாவில்லே நகரில் உள்ள பரந்து விரிந்த லோடஸ் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இந்த ஆசிரமத்தை உருவாக்கியவர் ரஜினியின் குரு சச்சிதானந்த சுவாமிகள். இந்த ஆசிரமத்தில் 30வது ஆண்டு விழாவிலும் ரஜினி பங்கேற்றார்.

ரஜினியுடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார்.

English summary
Rajinikanth has visited his Guru Sachidhanandha Swamigal's ashram at Virginia, US on Sunday with his daughter Aishwarya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil