»   »  'கண்ணா கலக்கிட்டீங்க...' - மாநகரம் குழுவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்!

'கண்ணா கலக்கிட்டீங்க...' - மாநகரம் குழுவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் திரைக்கு வந்து, பலராலும் பாராட்டப்பட்ட மாநகரம் படத்தைப் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

படம் பார்த்து முடித்ததும், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு போன் செய்த ரஜினி, "கண்ணா ஹா ஹா... படம் பார்த்தேன் கலக்கிட்டிங்க , சூப்பர்.. நல்ல படம் சீட் நுனியில் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன்.. கலக்குங்க, கலக்குங்க...," என்று கூறியுள்ளார்.

Rajinikanth watches Maanagaram movie

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவையும் போனில் வாழ்த்தியுள்ளார் ரஜினி. இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரபு, " மாநகரம் படம் பார்த்துவிட்டு, தலைவர் என்னுடன் இன்று பேசினார்", என்று குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth watches Maanagaram movie

ஏற்கெனவே எஸ். ஆர். பிரபு தயாரிப்பில் 'ஜோக்கர்' திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தயாரிப்பாளர் எஸ்.பிரபு மற்றும் குழுவினரை அழைத்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
Superstar Rajinikanth has wished the team of Maanagaram movie after watched the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil