twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாரு சொன்னா காம்பன்சேஷன் படம்னு.. ‘ஜெயிலர்’ படத்துக்கு ரஜினிகாந்தின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

    |

    சென்னை: அண்ணாத்த படம் சுமாராக ஓடியதால் அதற்கான காம்பன்சேஷன் படமாகத்தான் சன் பிக்சர்ஸ் உடன் மீண்டும் ரஜினிகாந்த் இணைந்துள்ளார் என பேசி வரும் சிலருக்கு நிச்சயம் இந்த செய்தி ஷாக்காகத்தான் இருக்கும்.

    அதே போல பீஸ்ட் தோல்வியை சரி கட்ட நெல்சன் சும்மாவே காசு வாங்காமல் படம் இயக்க உள்ளார் என்றும் இஷ்டத்துக்கு கதை அளந்து வருகின்றனர்.

    ஆனால், நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த நிலையில், ஜெயிலர் படத்துக்கு இதுவரை இந்தியாவிலேயே எந்த நடிகரும் வாங்காத உச்ச பட்ச தொகையை நடிகர் ரஜினிகாந்துக்கு சன் பிக்சர்ஸ் சம்பளமாக வழங்கப் போவதாக கூறுகின்றனர்.

    விக்ரம் வெற்றிக் கொண்டாட்டம்.. கொண்டாட்டம்னா விருந்து இல்லாமலா.. 40 வகையான உணவுகளுடன் விருந்து! விக்ரம் வெற்றிக் கொண்டாட்டம்.. கொண்டாட்டம்னா விருந்து இல்லாமலா.. 40 வகையான உணவுகளுடன் விருந்து!

    ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக்

    ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக்

    இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் தலைவர் 169 படம் என அறிவிக்கப்பட்டு இருந்த படத்துக்கு தற்போது 'ஜெயிலர்' என டைட்டில் வைக்கப்பட்டு அதன் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. அரிவாளில் ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனமாக உருவாக்கப்பட்ட போஸ்டருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி தனுஷ், சிவகார்த்திகேயன் என பிரபலங்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு தெரிவித்தனர்.

    மீண்டும் சன் பிக்சர்ஸ்

    மீண்டும் சன் பிக்சர்ஸ்

    இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா குஷ்பு, ஜகபதி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. விமர்சன ரீதியாக படம் சொதப்பிய நிலையிலும், சன் பிக்சர்ஸ்க்கு நல்ல லாபம் என அதன் ஆண்டு அறிக்கையிலே தகவல் வெளியான நிலைய்ல், மீண்டும் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை தயாரிக்க உள்ளது சன் பிக்சர்ஸ்.

    நெல்சன் சம்பளம்

    நெல்சன் சம்பளம்

    விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி நெல்சன் சொதப்பிய நிலையில், சம்பளம் ஏதும் வாங்காமல் ஜெயிலர் படத்தை இயக்கப் போகிறார் என பேச்சுக்கள் கிளம்பிய நிலையில், சமீபத்தில் பீஸ்ட் படத்துக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நெல்சன் ஜெயிலர் படத்தை இயக்க 30 கோடி வாங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

    151 கோடி சம்பளம்

    151 கோடி சம்பளம்

    இந்நிலையில், ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 151 கோடி ரூபாயை சம்பளமாக சன் பிக்சர்ஸ் வழங்க உள்ளதாக டாப் சீக்ரெட் தகவல் ஒன்று கசிந்துள்ளது. இதுவரை இந்தியாவில் எந்தவொரு நடிகரும் 150 கோடி சம்பளம் வாங்காத நிலையில், ஒன்லி ஒன் சூப்பர் ஒன் என்பதற்கு ஏற்றார்போல நடிகர் ரஜினிகாந்துக்கு ஜெயிலர் படத்துக்கு இத்தனை கோடிகளை அள்ளிக் கொடுக்க சன் பிக்சர்ஸ் தயாராக உள்ளதாம்.

    படத்திற்கு மட்டும்

    படத்திற்கு மட்டும்

    நடிகர்கள், நடிகையர்கள் சம்பளம் சேர்க்காமல் படத்திற்கு மட்டுமே 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான புரொடக்‌ஷன் வேலைகளை தாராளமாக செய்ய நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் அனுமதி வழங்கி இருப்பதாகவும், உலகளவில் மிகப்பெரிய புரமோஷன் உடன் ஜெயிலர் படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    சிவராஜ் குமார்

    சிவராஜ் குமார்

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ள நிலையில், கர்நாடகாவில் மட்டும் தனியாக 100 கோடி வசூல் டார்கெட்டை வைத்து படம் ரெடியாக போவதாகவும், ரியல் பான் இந்திய படமாகவும் ஜெயிலர் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படம் மூலமாக செம கம்பேக் கொடுக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.

    English summary
    Rajinikanth will get a whopping 151 crore rupees salary for Jailer movie strong buzz circulates in closed industry circles. Sun Pictures will have a heavy plans for Jailer movie grand release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X