விரைவில் அமெரிக்கா பறக்கும் ரஜினி...தலைவர் 169 க்கு தயாராகிறாரா?

சென்னை : ரஜினி மிக விரைவில் அமெரிக்க செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங்கிற்காக தயாராகி வருகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் 2021 ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. சூப்பர் ஹிட்டான இந்த படத்திற்கு பிறகு ரஜினி ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ரஜினி அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கும் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டது.

தலைவர் 169 ல் இவங்களா

தலைவர் 169 ல் இவங்களா

நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்திற்கு பிறகு, மீண்டும் அவர் இயக்கும் தலைவர் 169 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாகவும், பிரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் வில்லனாக நடிக்க கன்னட நடிகர் சிவ ராஜ்குமாரிடம் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

தள்ளி போகும் ரிலீஸ்

தள்ளி போகும் ரிலீஸ்

தலைவர் 169 படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை ஷுட்டிங் எப்போது துவங்கப்பட உள்ளது என்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த தலைவர் 169 படம், தற்போது அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் அமெரிக்க பயணம்

ரஜினியின் அமெரிக்க பயணம்

கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி, வருடத்திற்கு ஒரு முறை வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அமெரிக்கா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுவும் ஒரு படத்தின் ஷுட்டிங்கை துவங்குவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனைக்கு செல்வது ரஜினியின் வழக்கம் அப்படி அமெரிக்கா செல்லும் போதெல்லாம் அங்கிருக்கும் தனது நீண்ட கால நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோரை சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி.

தலைவரின் அடுத்த பிளான்

தலைவரின் அடுத்த பிளான்

ரஜினி அமெரிக்கா போகும் போதெல்லாம் அவரின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி செம டிரெண்டிங் ஆகும். அந்த வகையில் ரஜினி விரைவில் அமெரிக்க செல்ல உள்ளாராம். அங்கு மருத்துவ பரிசோதனைகளை முடித்து விட்டு இரண்டு வாரங்கள் தங்கி ஓய்வெடுக்க போகிறாராம். அவருடன் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் 169 ஷுட்டிங் எப்போ

தலைவர் 169 ஷுட்டிங் எப்போ

ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் ஜுலை கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். விரைவில் தலைவர் 169 ஷுட்டிங் மற்றும் அதில் நடிப்பவர்களின் விபரங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X