»   »  இந்த படத் தலைப்பு மாதிரியே அட்டகாசமா வருவீங்க! - ஜீவாவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

இந்த படத் தலைப்பு மாதிரியே அட்டகாசமா வருவீங்க! - ஜீவாவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காமெடியனாக அறிமுகமாகி, இப்போது ஹீரோவாக உயர்ந்திருக்கும் ஜீவாவின் 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் இசையை சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

ஜீவா எந்த அளவுக்கு ரஜினி ரசிகர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் இசையை தன் தலைவர் ரஜினியே வெளியிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி ஜீவாவுக்கு.


Rajinikanth wishes Lollu Sabha Jeeva

இசையை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜீவாவிடம், "படத்தின் தலைப்பை போலவே உங்கள் எதிர்கால ஆரம்பமே அட்டகாசமாக அமையும் ஜீவா," என்று வாழ்த்தியுள்ளார்.


ஸ்வாதி பிலிம்ஸ் சர்கியூட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜீவா ஜோடியாக சங்கீதா பட் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ஸ்ரீரஞ்சனி, சாம்ஸ், வையாபுரி, மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.


Rajinikanth wishes Lollu Sabha Jeeva

ஜெய கே தாஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரங்கா இயக்கியுள்ளார்.


ரங்கா இயக்கியுள்ள இந்தபடத்துக்கு ஜெய.கே.தாஸ் இசை அமைத்துள்ளார். ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


இந்த படம் மே 5-ந் தேதி திரைக்கு வருகிறது.

English summary
Superstar Rajinikanth was released the audio of Jeeva starring Aarambame Attakasam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil