Coolie - வார் 2வை குழியில் தள்ளிய கூலி.. முரட்டு அடிதான் போங்க.. ஹிந்தியில் மாஸ் காண்பிக்கும் ரஜினிகாந்த்

மும்பை: ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படமும், ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி. உள்ளிட்டோர் நடித்த வார் 2 திரைப்படமும் சில நாட்களுக்கு முன்பு ஒன்றாக ரிலீஸானது. இரண்டு படங்களின் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்திருந்தாலும் இரு படங்களுமே கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதேசமயம் வார் 2வுக்கு கூலி திரைபடம் எவ்வளவோ பரவாயில்லை என்ற நிலைமைதான் நிலவிவருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. முதன்முறையாக அவர்கள் இரண்டு பேரும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது. ரஜினி மட்டுமின்றி அவருடன் நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர் கான், சௌபின் சாஹிர், உபேந்திரா என மற்ற நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள்.

சுமாரான வரவேற்பு: ஏகப்பட்ட ஹைப்புகளோடு சில நாட்களுக்கு முன்பு வெளியான கூலியை ஆர்வத்துடன் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். சூப்பர் ஸ்டாரின் ஃபேன்ஸுக்கு படம் டபுள் ஓகே. அவரது எனர்ஜி, நடிப்பு, டான்ஸ், ஃபைட், சின்ன சின்ன ரியாக்‌ஷன்கள் என அத்தனையையும் அவர்கள் ரசித்தார்கள். அதேசமயம் பொதுவான ரசிகர்களுக்கு பெரிதாக படம் கனெக்ட் ஆகவில்லை. ஆனால் அவர்களும் ரஜினியை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth s Coolie has more theaters than War 2 in Hindi
Photo Credit:

போட்டிக்கு வந்த படம்: கூலி திரைப்படத்துக்கு போட்டியாக வார் 2 திரைப்படமும் ஆகஸ்ட் 14ல் ரிலீஸானது. ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் முதல் பாகம் ஹிந்தி மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே இரண்டாவது பாகமும் அதே ரிசல்ட்டை பெறும் என்ற நம்பிக்கை பாலிவுட்டில் இருந்தது.

எந்தப் படம் நல்ல படம்?: ஆனால் அப்படி ஒன்று பெரிதாக படம் இல்லை. சொல்லப்போனால் வார் 2 படத்தைவிடவும் கூலி திரைப்படம் அருமையாக இருக்கிறது என்ற பேச்சுக்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர், ஹிருத்திக் ரோஷனை வைத்து படம் முழுக்க காமெடி செய்திருக்கிறார்கள் என்றும் விமர்சனங்கள் வந்தன. கூலியும் கொண்டாடப்படவில்லை என்றாலும் வார் 2 அளவுக்கு கழுவி ஊற்றப்படவில்லை.

ஹிந்தியில் தியேட்டர்கள் அதிகரிப்பு: சூழல் இப்படி இருக்க நாளுக்கு நாள் வார் 2 பெற்ற ரெஸ்பான்ஸ் தேய்ந்துவிட்டது. பாஸ்க் ஆஃபிஸிலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மூன்றாவது நாளான நேற்று அந்தப் படம் இந்தியாவில் வெறும் 33 கோடி ரூபாயைத்தான் வசூலித்தது. கூலியோ 38 கோடி ரூபாயை வசூலித்தது என Sacnilk வலைதளம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் வார் 2வுக்கு புதிய சிக்கல் வந்திருக்கிறது.

அதாவது ஹிந்தியை பொறுத்தவரை முதல் இரண்டு நாட்களுக்கு பிறகு வார் 2 சுத்தமாக படுத்துவிட்டதாம். அதேசமயம் கூலிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் அங்கிருக்கும் தியேட்டர்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு படத்தை வெளியிட்ட பென் நிறுவனம் முதலில் 3,000த்திலிருந்து 3,500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது. இப்போது அந்த எண்ணிக்கையை 4,500 முதல் 6,000 திரையரங்குகளாக உயர்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X