»   »  ஒரு வழியா டிசம்பர் 4-ம் தேதி ரிலீசாகிறதாம் ரஜினி முருகன்!

ஒரு வழியா டிசம்பர் 4-ம் தேதி ரிலீசாகிறதாம் ரஜினி முருகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வருமா வராதா.. எனக் கேட்டு ஆவலுடன் எதிர்ப்பார்த்து, பின்னர் சந்தேக லிஸ்டில் போடப்பட்ட படமான ரஜினிமுருகன் வரும் டிசம்பர் 4 ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லிங்குசாமி - சுபாஷ் சந்திர போஸின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள படம் ரஜினி முருகன்.


பிரச்சினை

பிரச்சினை

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் தயாராகிப் பல மாதங்கள் ஆகின்றன. அந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சில பிரச்சினைகள் காரணமாக அந்தப்படம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.


நம்பிக்கை

நம்பிக்கை

கடைசியாக டிசம்பர் மாதத்தில் அப்படம் கண்டிப்பாக வெளியாகிவிடும் என்று கூறப்பட்டது. டிசம்பர் 11 அல்லது 18 ஆம் தேதி படம் வெளியாகலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்தப் படம் மீது பெரும் நம்பிக்கையுடன் இருப்பதால், இந்த ஆண்டுக்குள் வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார் லிங்குசாமி.


டிசம்பர் நான்காம் தேதியே

டிசம்பர் நான்காம் தேதியே

ஆனால் இப்போது அந்தப்படம் ஒரு வாரம் முன்னதாக டிசம்பர் நான்காம் தேதியே வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்தப்படம் வெளியீடு தொடர்பாக கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்ததில், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு ஏற்பட்டுவிட்டதாம். இதனால் டிசம்பர் நான்காம்தேதியே படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.


English summary
Sources says that Lingusamy's Ponram directed movie Rajinimurugan will be released on Dec 4th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil