»   »  சிவகார்த்திகேயன் "தாத்தா"வோடு கை கோர்க்கும் சிபிராஜின் அப்பா.. ஜி.வி.பிரகாஷுக்காக!

சிவகார்த்திகேயன் "தாத்தா"வோடு கை கோர்க்கும் சிபிராஜின் அப்பா.. ஜி.வி.பிரகாஷுக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டிராஜ் இயக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் 2ம் பாகத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திக்கேயன், விமல் நடித்த படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். முதல் படத்தில் நடித்த சிவகார்த்திக்கேயன் பிரபல நடிகராகிவிட்டதால், அவரது சம்பளமும் அதிகமாகிவிடவே, இந்த படத்தில் ஹீரோவாக ஜி.வி. பிரகாஷை ஒப்பந்தம் செய்துள்ளார் பாண்டிராஜ்.

 Rajkiran and Sathyaraj in Pandiraj’s next

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றனர்.

சத்யராஜ், ராஜ்கிரண்

இந்நிலையில், ராஜ்கிரண், சத்யராஜ் கதாபாத்திரம் குறித்த முக்கியமான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இப்படத்தில் சத்யராஜூம், ராஜ்கிரணும் நாடகக் கலைஞர்களாக வருகிறார்களாம்.

காதலுக்கு உதவி

நாடக கலை அழிந்துபோன பிறகு, எந்த வேலையும் இல்லாததால் ஊரில் வெட்டி பஞ்சாயத்து செய்து பொழுதை கழித்து வருவார்களாம். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜி.வி.பிரகாஷின் காதலுக்கும் உதவி செய்வார்களாம்.

தாத்தாக்கள்

கிராமத்து பின்னணியில் உருவாக்க இருக்கும் இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் தாத்தாக்களாக சத்யராஜும் ராஜ்கிரணும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே மஞ்சப்பை, ரஜினி முருகன் படங்களில் தாத்தாகவாக நடித்துள்ளார் ராஜ்கிரண்.

மாஜி ஹீரோக்களுடன் ஜி.வி.பி

தற்போது இயக்குனர் ராஜேஷின் ‘கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் நடித்துவரும் ஜி.வி. பிரகாஷ் அதை முடித்துவிட்டு கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடிக்கப் போகிறார். இரண்டு கதாநாயகிகளுடன் நடித்து பிரபலமான ஜி.வி.பிரகாஷ், முன்னாள் கதாநாயகர்களுடன் நடித்து வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
GV Prakash is playing the lead in Pandiraj's Kedi Billa Killadi Ranga 2. Now, apparently, Pandiraj has roped in two veteran actors - Sathyaraj and Rajkiran - to essay pivotal roles in the film. This is the first time that Pandiraj will be working with the two actors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil