»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பெட்ரோல் பங்க் நடத்த லைசென்ஸ் வாங்கித் தருவதாக கூறி பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒருவரை நடிகர் ராஜ்கிரண் மோசடிசெய்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆதாரம் கிடைத்தால் ராஜ்கிரண் கைது செய்யப்படுவார் என்றுபாண்டிச்சேரி போலீஸ் கண்காணிப்பாளர் சந்திரன் கூறியுள்ளார்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் புதுவை போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்குபெட்ரோல் பங்க் வைப்பதற்கு அனுமதி வாங்கித் தருவதாக பத்மஜோதி என்ற பெண் உறுதியளித்தார்.

இதையடுத்து அவரைப் பார்த்து முன்பணம் கொடுப்பதற்காக கடந்த ஆண்டு மே மாதம், புதுவை முத்துமாரியம்மன் கோவில்தெருவில் உள்ள பத்மஜோதியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு நடிகர் ராஜ்கிரண் இருந்தார்.

அன்றைய தினம் ராஜ்கிரணும், பத்மஜோதியும் என் கண் முன்பாக மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். பின்னர்பத்மஜோதியிடம் ரூ. 95,000 கொடுத்தேன். பின்னர் தொடர்ந்து பலமுறை பணம் கொடுத்தேன். மொத்தமாக அவரிடம் ரூ. 3.5லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன்.

சில நாட்கள் கழித்து எனக்குப் போன் செய்து இன்னும் ரூ. 50,000 கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்றார். ஆனால்அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறி விட்டேன். பின்னர் பத்மஜோதியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

இதையடுத்து நடிகர் ராஜ்கிரணிடம் கேட்கலாம் என்று சென்னைக்கு சென்றேன். ஆனால் அவர் என்னைப் பார்க்க மறுத்து விட்டார்.

இந் நிலையில் பத்மஜோதி இதுபோல பல ஊர்களில் மோசடி செய்திருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்ட காட்சியை டிவிகள்மற்றும் பத்திரிக்கைகளில் பார்த்து அதிர்ந்தேன். எனவே பத்மஜோதி மற்றும் ராஜ்கிரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்திாயளர்களிடம் எஸ்.பி. சந்திரன் பேசுகையில், நடிகர் ராஜ்கிரணுக்கும், இந்த மோசடிக்கும் சம்பந்தம் உள்ளதாஎன்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவரது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதாரம் இருந்தால்அவர் கைது செய்யப்படுவார் என்றார்.

ஏற்கனவே திருமணமான ராஜ்கிரண் நட்சத்திர நடிக தம்பதியினரின் பிடியில் சில காலம் சிக்கினார். பார்ட்டி நடத்துவது, இல்லாபொல்லாத வேலைகளை செய்வதில் பிரபலமான அந்தத் தம்பதியின் மகளிடம் தான் சம்பாதித்ததை எல்லாம் இழந்துவிட்டுஓட்டாண்டியானார். இதனால் கோடிக்கணக்கான சொத்துக்கள், படங்களை இழந்து வறுமைக் கோட்டில் இருந்தார் ராஜ்கிரண்.இவரால் வாழ்வு பெற்ற வடிவேலு இவருக்கு உதவினார்.

சேரனின் பாண்டவர் பூமியும், பாலாவின் நந்தா படம் ராஜ்கிரணுக்கு புதுவாழ்வு கொடுத்தது. இந் நிலையில் அவர் மீதுஇன்னொரு பெண்ணுடன் தொடர்பு புகாரும் மோசடி புகாரும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு படத்தை டைரக்ட் செய்ய ரூ. 1 கோடி வரை வாங்கிய முதல் தமிழ் டைரக்டர் இவர் தான். சில படங்கள் தந்தாலும் அனைத்தும்சூப்பர் ஹிட் என்பது நினைவுகூறத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil