»   »  ரஜினி சாதா குண்டு இல்லடா.. அணுகுண்டு.. இது ராம் கோபால் வர்மா!

ரஜினி சாதா குண்டு இல்லடா.. அணுகுண்டு.. இது ராம் கோபால் வர்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சர்ச்சைக் கருத்துக்களுக்குப் பேர் போன பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா, ரஜினியைப் பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா. அதேசமயம் அடிக்கடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடும் கருத்துக்களால் சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.

அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினியைக் குறித்த அவரது பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இதே வாய்தான் முன்பு ரஜினியை கடுமையாக சாடியிருந்தது. தற்போது அதே வாயால் பாராட்டியுள்ளார் வர்மா.

ரஜினியைக் கடத்த முயற்சி...

ரஜினியைக் கடத்த முயற்சி...

முன்பு ஒருமுறை தனது வீரப்பன் படத்தைப் பற்றிய பேட்டியொன்றில், சந்தனக்கடத்தல் வீரப்பன் ரஜினியைக் கடத்த திட்டமிட்டதாகவும், பேரத்தின் ஒருபகுதியாக தன்னைக் குறித்து பிரபலமான படத்தை இயக்கவும் வலியுறுத்த வீரப்பன் நினைத்ததாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

ஏமியுடன் போட்டோ...

ஏமியுடன் போட்டோ...

இதேபோல், ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வரும் ஏமி ஜாக்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்து ராம்கோபால் வர்மா சில டிவிட்களை வெளியிட்டார்.

விமர்சனம்...

விமர்சனம்...

அதில், ரஜினியின் தோற்றம் மற்றும் நடனத்தைப் பற்றி அவர் விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு கண்டனம் தெரிவித்தவர்களை பவர்ஸ்டார் ரசிகர்களோடு அவர் ஒப்பிட்டு கருத்துக்களை வெளியிட்டார்.

அமிதாப்புடன் ஒப்பீடு...

அமிதாப்புடன் ஒப்பீடு...

சமீபத்தில் அமிதாப் நடித்து வெளியாகியுள்ள Te3n படம் பற்றி இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அமிதாப்பை ரஜினியுடன் ஒப்பிட்டு தெரிவித்த கருத்துகளுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

கபாலிடா...

கபாலிடா...

இப்படியாக அடிக்கடி ரஜினி குறித்த விமர்சனங்களால் சர்ச்சையில் சிக்கி வரும் ராம்கோபால் வர்மா தற்போது ரஜினியைப் புகழ்ந்து ஒரு டிவிட் வெளியிட்டுள்ளார். அதாவது, கபாலி ரிலீசை முன்னிட்டு ஏர் ஏசியா விமான நிறுவனம் தனது பயணிகளுக்கு சில சலுகைளை அறிவித்துள்ளது. கூடவே தனது விமானத்திலும் ரஜினியின் கபாலி படத்தை பிரமாண்டமாக வரைந்துள்ளது.

அணுகுண்டு...

இந்த விமானத்தின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ள ராம்கோபால் வர்மா, "இதுதான் சூப்பர் ஸ்டார் பிரமாண்டம். ரஜினி சாதாரண குண்டு இல்லை, அணுகுண்டு" என கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Ram Gopal Varma, who normally bashes Rajinikanth when he gets a chance, is now all praise for him. Tweeting about this incredible achievement, he wrote that,” This is not the height but it is the fucking super stratosphere of stardom ..Rajni is not a bomb..He’s an Atom Bomb.”

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil