தலைவர் 170 படத்தோட டைரக்டர் இவர் தானா?: ரெண்டாவது படத்துலயே செம்ம ஜாக்பாட் தான்

சென்னை: அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Rajini and Kamal | இப்பவும் இப்படி மிரட்டுறாங்களே! *Kollywood

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர், அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 இயக்குநர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் 169 ஜெயிலர்

தலைவர் 169 ஜெயிலர்

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த அண்ணாத்த திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவு ஏற்பட்டாலும், வசூலில் மாஸ் காட்டியது. அதனைத் தொடர்ந்து ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தொடங்கியதோடு, ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலானது.

பலமான கூட்டணியில் ஜெயிலர்

பலமான கூட்டணியில் ஜெயிலர்

ஜெயிலர் படத்தில் ரஜினியின் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முக்கியமான நடிகர்கள் விரைவில் ஜெயிலர் படத்தில் கமிட் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தலைவர் 170 அப்டேட்

தலைவர் 170 அப்டேட்

ஜெயிலர் திரப்படம் அடுத்தாண்டு சம்மர் விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்பவாறு படப்பிடிப்பை விரைந்து முடிக்க நெல்சன் திட்டமிட்டுள்ளாராம். அதுமட்டுமின்றி, ரஜினியும் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு, தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளாராம். இது ரஜினியின் 170வது படமாக உருவாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.

இயக்குநர் இவர் தானா?

இயக்குநர் இவர் தானா?

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யாராக இருக்கும் என பல தகவல்கள் வெளியாகின. பல முன்னணி இயக்குநர்களின் பெயர்களும் இதில் அடிபட்டன. இந்நிலையில், தலைவர் 170 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக தெரிகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைப்பார் என்றும், இதன் ஷூட்டிங் அடுத்தாண்டு ஏப்ரலில் தொடங்கும் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது படத்திலேயே ஜாக்பாட்

இரண்டாவது படத்திலேயே ஜாக்பாட்

அட்லீயிடம் உதவியாளராக இருந்த சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படத்தை இயக்கியிருந்தார். சில மாதங்கள் முன் வெளியான இத்திரைப்படம், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதோடு, 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் லிஸ்ட்டிலும் இணைந்தது. டான் திரைப்படத்தை கமர்சியலாகவும் அதேநேரம் செம்ம சென்டிமெண்ட்டாகவும் இயக்கியிருந்தார் சிபி சக்கரவர்த்தி. இந்நிலையில், இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது, பலரையும் வியக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X