எவன் பார்த்த வேலைடா இது...தாய்நாட்டின் மீது சத்தியம் கேட்ட ராஜு
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் எட்டாவது வாரமான இந்த வாரத்திற்கு லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதற்காக பிக்பாஸ் வீடு பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாறி உள்ளது. இதில் சிலர் ஆசிரியர்களாகவும், மற்றவர்கள் மாணவர்களாகவும் மாறி உள்ளனர்.
முதல் நாளில் கண்டிப்பான வார்டனாக இருக்கும் சிபி மற்றும் பிரியங்கா மோதல் ஏற்பட்டது. வார்டன் பேச்சை கேட்காததால் தண்டனை பெற்று இரவு முழுவதும் வெளியிலேயே தூங்கினார். அவருடன் சேர்ந்து பாவ்னியும் வெளியில் தூங்க வைக்கப்பட்டார்.

யார் செய்த வேலை
நிகழ்ச்சியின் 53 வது நாளான இன்று, 52 வது நாள் இரவு மாணவர்களாக இருக்கும் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து, ஆசிரியர்களின் குத்தி, விசில் ஆகியவற்றை ஒழித்து வைத்தது யார். ஆசிரியர்களின் முகத்தில் மார்க்கரை வைத்து கிறிக்கியது யார், வார்டனை கேலி செய்து படம் வரைந்தது யார் என வார்டன் சிபி விசாரிக்கிறார்.

எனக்கு தெரியாது
அப்போது அனைவரும் தெரியாது என்கிறார்கள். திடீரென தமிழ் ஆசிரியரான ராஜு, சத்தியமாக, தாய் நாட்டின் மீது ஆணையாக என சொல்லி கேட்கிறார். இதே போல் புத்தகத்தை வைத்து அனைவரிடமும் தனித்தனியாக கேட்கிறார். தாமரை முதல் ஆளாக வந்து, அதை நான் பார்க்கவேயில்லை என்கிறார். சத்தியமாக இவ்வளவு அழகாக படம் வரைய எனக்கு தெரியாது என்கிறார்.

ஒப்புக் கொண்ட பாவ்னி
ஆனால் பாவ்னியிடம் தாய்நாட்டின் மீது ஆணையாக என கேட்கும் போது என தயங்கி நிற்கிறார். பிறகு அவரே தான் குச்சியை ஒழித்து வைத்ததை ஒப்புக் கொண்டார். இந்த விஷயம் இமான் அண்ணாச்சிக்கும் தெரியும் என்கிறார். அவர்களை தண்டனை வழங்க தனியாக அமர வைக்கிறார்.

விசில எடுத்தது நான் தான்
ஐக்கி பெர்ரி, தாய்நாட்டின் மீது ஆணையாக என ஆரம்பித்து, அந்த விசில எடுத்தது நான் தான் என சொல்லி, அதை எடுத்து வந்து கொடுத்தார். இதை பார்த்த அனைவரும், அடிப்பாவி எதுவும் தெரியாதது போல் எப்படி நடிக்கிறாய் என கிண்டல் செய்கிறார்கள். தொடர்ந்து அவரை தனியாக அழைத்து வந்து விசாரிக்கிறார்கள்.

தவறை ஒப்புக் கொண்ட ஐக்கி
அப்போது ஐக்கி, என் ஹேர் கலரை மாற்ற சொன்னார்கள் எனக்கு அது பிடிக்கவில்லை. அதற்காக தான் இப்படி செய்தேன். தாய்நாட்டின் மீது ஆணையாக, நான் தான் விசிலை எடுத்தேன். குச்சியை தான் முதலில் தேடினேன். ஆனால் அதற்கு முன்பே அதை யாரோ எடுத்து விட்டார்கள். லிப்ஸ்டிக் வைத்து முகத்தில் வரைந்தது நான் தான். இது என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என சத்தியம் செய்கிறார்.


Click it and Unblock the Notifications











