தொல்லை தாங்க முடியல...சண்டை போட்டுட்டே இருக்காங்க சார்...கமலிடம் புகார் சொன்ன ராஜு

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வாரம் 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். கேப்டனான நிரூப், வைல்ட்கார்டு என்ட்ரியான அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூன்று பேரை தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அபிஷேக் ராஜா குறைந்த ஓட்டுக்களை பெற்று, இந்த வாரம் வெளியேற போவதாக கூறப்படுகிறது.

கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்

கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார் கமல். இதன் காரணமாக கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன், கடந்த வார இறுதி எபிசோட்களை தொகுத்து வழங்கினார்.

டிஸ்சார்ஜ் ஆன கமல்

டிஸ்சார்ஜ் ஆன கமல்

கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்துள்ள கமல் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளார். இதனால் இந்த வார இறுதி எபிசோடான இன்று மற்றும் நாளைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கமல் வருவாரா அல்லது இந்த வாரமும் ரம்யா கிருஷ்ணனே தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மீண்டும் வந்த கமல்

மீண்டும் வந்த கமல்

நிகழ்ச்சியின் 62 வது நாளுக்கான இன்றைய முதல் ப்ரோமோவில் கமல் வந்து, அனைவரின் அன்பால் கொரோனாவில் இருந்து தான் விரைவில் மீண்டு வந்திருப்பதாக கூறினார். மற்ற சீசன்களுடன் ஒப்பிடுகையில், இந்த சீசனில் அனைவரும் தனித்தனியாக விளையாடுகிறார்கள். தனக்கென தனி யுக்தியை வைத்துள்ளார்கள் என கூறினார்.

புகார் சொன்ன ராஜு

புகார் சொன்ன ராஜு

இரண்டாவது ப்ரோமோவில் வீட்டில் உள்ளவர்களை சந்திக்கும் கமல், என்ன பிரியங்கா, இமான் அண்ணாச்சி எந்த வேலையும் செய்யாமல் ஓபி அடிக்கிறார் என சொன்னீர்களே. தாமரை, நீங்க என்ன சொல்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு தாமரை, நான் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு குழம்பு கூட வைத்தார் சார் என்கிறார். அப்போது ராஜு எழுந்து நின்று, இவங்க தொல்லை தாங்க முடியல சார். எப்பவும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என கமலிடம் புகார் கூறுகிறார்.

இவனால தான் சண்டையே

இவனால தான் சண்டையே

அதற்கு பதிலளித்த தாமரை, இவன் பாத்திரம் கழுவாததால் தான் சார் சண்டையே. ஆனால் நாங்கள் சண்டை போடுவதாக இவன் குற்றம்சாட்டுகிறான் என்கிறார். இதை கேட்டு கமல் உள்ளிட்ட அனைவரும் சிரிக்கிறார்கள். இந்த ப்ரோமோ ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. கமல் திரும்பி வந்ததற்கு பலரும் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

பாவம் பிரியங்கா

பாவம் பிரியங்கா

ப்ரோமோவை பார்த்து விட்டு நெட்டிசன்கள், பிக்பாஸ் சீசன் 3 ல் கவினை எல்லோரும் டார்கெட் செய்ததை போல் இந்த சீசனில் அனைவரும் பிரியங்காவை டார்கெட் செய்கிறார்கள். பிரியங்கா தான் டைட்டில் வின்னர் என சிலர் ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் இன்னும் 2 வாரங்கள் தான் பிரியங்கா கிளம்பி விடுவார் என சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X