Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராஜுவுக்கு தகுதி கிடையாது...நிரூப் சொன்ன டஃப் போட்டியாளர் பெயர்...அதிர்ந்து போன ரசிகர்கள்
சென்னை : பிக்பாசில் அனைத்து சீசன்களிலும் நடக்கும் டாஸ்க்குகள் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் கமல் வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை எபிசோட் தான் சுவாரஸ்யமாக காட்டப்பட்டு வருகிறது.
இந்த சீசனில் கமல், பார்வையாளர்களின் கருத்துக்களை அப்படியே பேசுகிறார். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை அப்படியே கேள்வியாக போட்டியாளர்களிடம் கேட்பதால், ரசிகர்கள் அதை ரசித்து பார்த்து வருகின்றனர்.
எதிரிகளுக்காக
பூஜை...
ராகு-கேது
கோயிலில்
வழிபாடு
செய்த
தலைவி
ஹீரோயின்

மோதல் பற்றி விசாரித்த கமல்
அப்படி இந்த வாரம் நடத்தப்பட்ட டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்குகளின் போது நடந்த மோதல்கள், வாக்குவாதங்கள் பற்றிய கமல் பேசி வருகிறார். இந்நிலையில் இன்றைய ஞாயிற்றுக்கிழமை எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரியங்காவை வறுத்தெடுத்த கமல்
இதன் முதல் ப்ரோமோவில் வழக்கம் போல் பிரியங்காவை கேள்விகளால் வருத்தெடுத்து வருகிறார். அதுவும் சிரித்துக் கொண்டிருக்கும் அமீரையும் சேர்த்து வைத்து கேட்பதால், கமலையே கலாய்த்து பேசுனீங்கல்ல, உங்களுக்கு நல்லா வேணும் என்ற ரேஞ்சில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ராஜுவுக்கு தகுதியில்லை
பிக்பாஸின் 91 வது நாளான இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோவில், பிக்பாசில் வெற்றி பெற தகுதியில்லாத நபராக ராஜுவை தான் பார்ப்பதாக நிரூப் கூறுகிறார். அவர் எல்லோரையும் சிரிக்க வைக்கிறார். என்டர்டைன் பண்ணுகிறார். ஆனால் ஒரு இடத்தில் கூட வெறியுடன் போட்டி போடுவதை நான் பார்க்கவில்லை. அவருக்கு பதில் டஃப் போட்டியாளராக அபிஷேக்கை நான் நினைக்கிறேன் என்கிறார். இதை கேட்டு ராஜு உள்ளிட்ட அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர்.

என்ன திடீர் பாசம் அவர் மேல்
அபிஷேக் போட்டியில் இருந்த போது அவர் அனைவரையும் இன்ஃப்ளுயன்ஸ் செய்வதாக கூறி கோபப்பட்டவர் நிரூப் தான். அதே போல் அபிஷேக் மீண்டும் வந்த போது அவர் பிரியங்காவுடன் நெருக்கமாக இருப்பதை ஏற்க முடியாமல் கோபப்பட்டவரும் நிரூப் தான். இப்போது ஏன் அபிஷேக் மீது நிரூப்பிற்கு திடீர் பாசம் என ரசிகர்கள் பலர் கேட்டு வருகிறார்கள்.
Recommended Video

நீ ஏன் சேர்ந்து விளையாடினாய்
இன்னும் பலர், இப்படி பேசுவதால் உனக்கு விழும் ஓட்டுக்களும் விழாமல் போக போகிறது. தனித்தனியாக விளையாட சொல்றியே அப்புறம் எதற்காக பொம்மை டாஸ்கின் போது நீ ஐக்கியை பயன்படுத்தி விளையாடினாய். கட்டதுறைக்கு கட்டம் சரியில்லையா. சரியாக சொன்னாய் நிரூப். நீங்கள் சொல்வது தான் உண்மை என கமெண்ட் செய்து வருகின்றனர்.