இனி தேவையான ஆணிகள் புடுங்கப்படும்...பிக்பாஸை கலாய்த்த ராஜு

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஆறாவது வாரம் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது 13 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரத்தின் துவக்கம் முதலே இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. நீயும் பொம்மை, நானும் பொம்மை. நினைத்து பார்த்தால் தெரியும் என்ற பெயரில் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் வாய்ச்சண்டைகள் நடந்து, பிக்பாஸ் பீப் போடும் அளவிற்கு மோசமாக வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.

பீப் போட்ட பிக்பாஸ்

பீப் போட்ட பிக்பாஸ்

பீப் போடும் அளவிற்கு கெட்ட வார்த்தைகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசப்பட்டதை முந்தைய சீசன் போட்டியாளர் பாலாஜி உள்ளிட்ட பலரும் கோபமாக கண்டித்திருந்தனர். இந்த சண்டைகள் தீவிமடைந்ததால், ஹவுஸ்மேட்களே யார் பக்கம் பேசுவது என தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.

சண்டை போடும் நிரூப்

சண்டை போடும் நிரூப்

இந்நிலையில் நிகழ்ச்சியின் 39 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் ப்ரோமோவில், இந்த வாரம் வீட்டின் ஆளுமை அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பாவனி செய்ய சொல்லும் டாஸ்க்கை செய்ய மறுத்து சண்டை போடுகிறார் நிரூப். இதை தட்டிக் கேட்கும் பிரியங்காவிடமும் கோபமாக கத்துகிறார். இதை பார்த்து பலரும் இன்னமுமா இந்த ரணகளம் முடியவில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இதை வைத்து சண்டை போட்டுக் கொண்டே இருப்பீர்கள் என கேட்டுள்ளனர்.

ரெட் கார்டு வருமா

ரெட் கார்டு வருமா

அதே சமயம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க்குகளில் நிரூப் நடந்து கொள்ளும் விதத்தை அனைவரும் கண்டித்து வருகிறார்கள். நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் அக்ஷராவை இடுப்போடு பிடித்து அவர் நிறுத்தியது கடும் எதிர்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இதனால் கெட்ட வார்த்தைகள் பேசியதற்காக அவருக்கும், சிபிக்கும் ரெட் கார்டு போடப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்த வாரம் கமல் இதையெல்லாம் தட்டிக் கேட்டு, கண்டிப்பாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பிக்பாஸ் விருதுகள்

பிக்பாஸ் விருதுகள்

இதற்கிடையில் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வீட்டிற்குள் நடத்தப்படுகிறது. இதில் சிறந்த பெர்ஃபார்மர் விருது நிரூப்பிற்கு வழங்கப்படுகிறது. சிறந்த டிரஸ் அணிபவருக்கான விருது அக்ஷராவிற்கு வழங்கப்படுகிறது. இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைக்கும் முதல் விருது என பெருமையாக சொல்லிக் கொள்கிறார் அக்ஷரா.

தேவையான ஆணிகள் புடுங்கப்படும்

தேவையான ஆணிகள் புடுங்கப்படும்

தொடர்ந்து, நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் என்ற டேக்கை ராஜுவுக்கு இசைவாணி வழங்குகிறார். இதனால் லேசாக கடுப்பாகும் ராஜு, மைக்கை வாங்கி, இனி தேவையான ஆணிகள் புடுங்கப்படும் என பிக்பாஸை கலாய்க்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலர், இந்த சீசனே தேவையில்லாத ஆணி தான என கலாய்த்துள்ளனர். ராஜுவின் இந்த வேற லெவல் கலாயை பலர் ரசித்தும், பாராட்டியும் கமெண்ட் செய்துள்ளனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

கலாய்க்கும் நெட்டிசன்கள்

நிரூப்புடா நெருப்புடான்னு சொல்லிட்டு இருந்தானுங்களே எங்கடா அந்த குரூப்ப காணோம். அக்ஷரா நிச்சயம் டாப் 5 ல் வருவார். அப்புறம் என்ன அடுத்த வார எலிமினேஷன் நிரூப் தான. அவன் அவன் மழை வெள்ளத்தில் மாட்டி கஷ்டபடுறானுங்க. இவனுங்க எப்படித்தான் பிக்பாஸ் நடத்துறாங்கனு தெரியல. ஒரு சீசனுக்கு எத்தனை ஃபேஷன் ஷோ நடத்துவீங்க. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு ஸ்மைலிங் ப்ரோமோ வெளியிட்டிருக்கீங்க என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X