பிரியங்கா, பாவனி, சுருதி, அக்ஷராவை வச்சி பேய் படம் எடுக்கப் போறேன்.. ராஜு வேற லெவல் கலாய்!
சென்னை: கடந்த சீசனுக்கு போடப்பட்ட அதே பிக் பாஸ் ரேடியோ செட்டை கடைசி நேரத்தில் இந்த சீசனிலும் பயன்படுத்தி உள்ளனர்.
எங்கே போன் கால் மூலம் போட்டியாளர்கள் வாழ்த்து சொன்ன நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வர மாட்டாங்களா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், கிராண்ட் ஃபினாலேவுக்காக இப்பவே சில போட்டியாளர்களை பிடித்துப் போட்டு இருக்கின்றனர்.
சுருதி, நதியா சங் முதல் புரமோவில் வந்த நிலையில் இரண்டாவது புரமோவில் வந்த சிபி மற்றும் அபிநய் பிக் பாஸ் ரேடியோ ஜாக்கிகளாக மூன்றாவது புரமோவில் மாறி உள்ளனர்.

பிக் பாஸ் ரேடியோ
கடந்த சீசனில் சுசித்ராவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிக் பாஸ் ரேடியோ ஸ்டேஷனில் சுச்சியை விட அர்ச்சனா தான் அசத்தினார். இந்நிலையில், அதே செட் போடப்பட்டு அபிநய் மற்றும் சிபியை ரேடியோ ஜாக்கிகளாக மாற்றி போட்டியாளர்களுடன் பேச வைத்துள்ளனர்.

மீண்டும் வந்த சிபிலா
அபிநய் மற்றும் சிபி பிக் பாஸ் வீட்டுக்கு மீண்டும் வந்த நிலையில், ரசிகர்கள் பலரும் சிபியின் வரவை மட்டுமே ஃபோகஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். ஒரு சில அபிநய் ரசிகர்கள் பாவம் அந்த மனுஷன் என்னடா பாவம் பண்ணாரு.. எவ்ளோ அழகா அவரும் கோபால்னு சொல்லி காமெடி பண்ண முயற்சிக்கிறாரு என அபிநய்க்கும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் படம்
இந்த பிக் பாஸ் வீட்டை படம் எடுக்க நினைத்தால் யாரை ஹீரோ, ஹீரோயின் மற்றும் வில்லனாக தேர்ந்தெடுப்பீர்கள் என ராஜுவிடம் சிபி கேட்கும் கேள்வி அடங்கிய மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி உள்ளது. சிபியின் கேள்வியை கேட்டவுடனே தனது நண்பனை குளிர வைக்கும் விதமாக ராஜு சொன்ன பதில் சிபி ரசிகர்களையும் குஷிப்படுத்தி உள்ளது.

சிபி தான் ஹீரோ
பிக் பாஸ் வீட்டை வைத்து படமெடுத்தால் கண்டிப்பா அந்த படத்தில் சிபி தான் ஹீரோ என ராஜு ஜெயமோகன் பளிச்சென பதில் சொல்ல, சிபி சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அதன் பின்னர் ஹீரோயின் யார் என்கிற கேள்விக்கு ராஜு சொன்ன பதில் தான் வேற லெவல் கலாய்.
Recommended Video

4 ஹீரோயின்கள்
ஹீரோயின் லிஸ்ட் நிறைய இருக்கு.. அதில் ஆன்டி ஒன்னு என பிரியங்காவை முதலில் வம்பிழுத்த ராஜு அடுத்ததாக பாவனி, சுருதி மற்றும் அக்ஷரா என 4 பேரை ஹீரோயின்களாக தனது படத்தில் போடுவேன் என்றும் அது பேய் படம் ஒவ்வொருவராய் பேய் பிடித்து ஆட்டும் என்றும் கிடைத்த கேப்பில் காமெடி பண்ணி ஸ்கோர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











