மெயின் ரோட்டுல முக்குனா வராதா? சந்திரமுகியை மட்டுமல்ல எல்லாரையும் சிரிக்க வைத்த ராஜு பாய்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் ஸ்டார் பிளேயராக கலக்கிக் கொண்டு இருக்கிறார் சின்னத்திரை நடிகர் ராஜு ஜெயமோகன்.
எம்.ஆர். ராதா கெட்டப் தனக்கு கொடுக்கப்பட்ட நிலையில், அதை சரியாக செய்து மற்ற போட்டியாளர்களை சிரிக்க வைத்த சிறந்த பர்ஃபார்மராகவும் தேர்வாகி உள்ளார்.
மூச்சு விட சிரமப்படும் ஆறு மாத குழந்தை... உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்
மற்றவர்கள் ஃப்ரீஸ் ஆகி நிற்க ராஜு ஜெயமோகன் ஒவ்வொருவரையும் சிரிக்க வைத்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஸ்டார் பிளேயர்
இந்த சீசன் பிக் பாஸ் தமிழ் 5ல் பல மிக்சர்களுக்கு நடுவே சிலர் மட்டும் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். அதில், அனைவராலும் ரசிக்கப்பட்டு வருபவர் தான் ராஜு ஜெயமோகன். அவரது சில நடவடிக்கைகள் மற்றும் நட்பு காரணமாக அவர் மீதும் நெட்டிசன்கள் குறைகளை தேடி கண்டுபிடித்து வருகின்றனர். ஆனால், இந்த சீசனில் இதுவரை ஸ்டார் பிளேயராக கலக்கிக் கொண்டு இருக்கிறார் ராஜு ஜெயமோகன்.

எம்.ஆர். ராதாவாக
எம்.ஆர். ராதா கெட்டப் என்றாலே எந்த நடிகருக்கும் ஒரு தனி கெத்து வந்து விடும். ராஜு ஜெயமோகனுக்கு அந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்ட நிலையில், அதனை உள்வாங்கி முடிந்தவரை நடித்து அசத்தி உள்ளார். சக போட்டியாளர்கள் அன்பையும் ராஜு ஜெயமோகன் தனது டாஸ்க்கின் மூலம் வெகுவாக கவர்ந்துள்ளார்.

தாமரையை சிரிக்க வைக்க
பஸர் அடித்ததும் மற்ற போட்டியாளர்களை எப்படி சிரிக்க வைப்பது என்பதே தெரியாமல் பலர் திணறி வந்த நிலையில், பல பேரை சிரிக்க வைத்து சிறந்த பர்ஃபார்மராக தேர்வான ராஜு பாய் முதல் நபராக தாமரை செல்வியை தான் சிரிக்க வைத்தார். எது கிடைச்சாலும் அதில் பாதியை தருகிறேன் என ராஜு பாய் சொன்னதுமே தாமரை சிரித்து விட்டார்.

ரோட்டுல முக்குனா
சந்திரமுகி கதாபாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இசைவாணியிடம் சந்திரமுகி.. ஏன் மெயின் ரோட்டுல முக்குனா வராதா? என எம்.ஆர். ராதா சர்காஸ்ட்டிக்கா கலாய்த்து பேசுவது போல பேசி அவரையும் சிரிக்க வைத்து விட்டார். பதிலுக்கு தர்ம அடி ஒன்றும் பரிசாக கிடைத்தது.

பாவனியை கலாய்த்ததும் சிரித்த அக்ஷரா
கிச்சன் ஏரியாவில் குரூப்பாக சிலையாக அக்ஷரா, பாவனி, சுருதி மற்றும் அபிநய் நின்று கொண்டிருக்க கஜினி பாவனியை பஸ் ஸ்டாண்டில் டோக்கன் போடுற பையா என சொன்னதும் அவர் சிரித்தாரோ இல்லையோ அக்ஷரா சிரித்து அவுட் ஆகி விட்டார். சுருதி மட்டும் செம ஸ்ட்ராங்காக சிரிக்காமல் நின்றார்.

ஸ்டார் விஜய்
காண்ட்ராக்டர் நேசமணி கெட்டப்பில் நின்று கொண்டிருந்த பிரியங்கா பக்கம் வந்த ராஜு ஜெயமோகன் அவர் குத்தியிருக்கும் ஸ்டார் பேட்ஜை பார்த்து ஸ்டார்.. ஸ்டார் விஜய் என விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்காவை பார்த்து சொன்னதும் அவரும் சிரித்து விட்டார்.

நிரூப்பும் சிரித்தார்
இமான் அண்ணாச்சியை சிரிக்க வைத்து விட்டு அருகே அம்பியாக நின்று கொண்டிருந்த நிரூப்பை சிரிக்க வைக்க முயற்சித்த ராஜு அவர் சிரிக்கவில்லை என சென்று விட்டு பின்னர் மீண்டும் மீண்டும் வந்து அவரை பார்த்து கலாய்க்க அவரும் சிரித்து விட்டார். ராஜு ஜெயமோகன் கொடுத்த நேரத்தில் பல ஹவுஸ்மேட்களை சிரிக்க வைத்தது மட்டுமின்றி பிக் பாஸ் ரசிகர்களையும் தீபாவளியை முன்னிட்டு சிரிக்க வைத்து விட்டார்.


Click it and Unblock the Notifications











