இந்த வீட்ல இருந்து நான் என்ன கத்துக்கிட்டேன்னா.. ராஜு சொன்ன சூப்பர் விளக்கம்.. ரன்னர் அப் தானா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளின் 3வது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 3ம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட புதுமுகங்களுடன் தொடங்கியது.
பெரிய ஃபேன் பேஸ் என்றும் இவர் தான் சூப்பர் ஸ்டார் என யாரையுமே சொல்ல முடியாத நிலையிலும், இந்த வீட்டிற்குள் இருப்பவர்களில் சிலரை மக்களுக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது.

அமீருக்கு டிக்கெட்
நம்பர் ஒன் இடத்தில் தானே போய் ஏறி நின்று கொண்டு தனக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என நினைத்து விளையாடிய சிபி, இந்த டிக்கெட் டு ஃபினாலேவிலும் கடைசி வரை போட்டி போடுவது சிறப்பான விஷயம். ஆனால், கடைசியாக கொடுக்கப்பட்ட பிசிக்கல் டாஸ்க்கில் அமீர் சிறப்பாக விளையாடி அதை வென்று விட்டார் என தகவல்கள் கசிந்து விட்டது. ஏற்கனவே ரோப் பிடித்து இருக்கும் டாஸ்க்கில் கடைசி வரை வந்த அமீர், தாமரைக்காக விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பிரியங்காவின் க்யூட்னஸ்
இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் நிரூப் என நினைத்தால் சற்றும் எதிர்பார்க்காத விதமாக பிரியங்கா பாலாஜி முருகதாஸாக மாறி விட்டார். சண்டை போடுவதும் சமாதானம் ஆகி விடுவதும் என பிரியங்கா ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இந்த சீசனை கொண்டு சென்று இருப்பதை யாராலும் மறக்க முடியாது.

மூன்றாவது புரமோ
பிரியங்காவுக்கு அடுத்த டாப் பிளேயர் இந்த சீசனில் ராஜு பாய் தான். அதனால் தான் மூன்றாவது புரமோவில் ராஜு பாய் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து எந்த விஷயத்தை எடுத்து செல்கிறேன் என்கிற டாப்பிக்கில் பேசுவதை காட்டுகின்றனர். மேலும், ஃபினாலேவுக்கு செல்லப் போகும் முதல் மூன்று நபர்களை சுற்றித் தான் இந்த புரமோக்கள் வரிசைப்படுத்தப் பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.

அம்மாவிடம் பேசணும்
இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து எல்லோரிடமும் பேச வேண்டும் என்பதை எடுத்துச் செல்கிறேன் என தன்னிடம் இருந்த குறையை வெளிப்படையாக கூறியுள்ளார் ராஜு. அம்மாவிடம் போனில் கடமைக்கு பேசிவிட்டு வைத்டு விடுவேன். இனிமேல் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து நடக்க முயற்சிப்பேன் என மனசுக்கு பட்டதை வெளிப்படையாக பேசி உள்ளார்.
Recommended Video

ராஜு ரன்னர் அப்பா?
பிரியங்காவுக்கு இந்த சீசன் பிக்பாஸ் டைட்டிலை கொடுக்க வேண்டும் என விஜய் டிவி முடிவு செய்து விட்டுத்தான் ராஜுவை கடந்த சில வாரங்களாக செல்ஃப் டிஸ்ட்ரக்ஷன் மோடுக்கு கொண்டு சென்று வருவதாக பிக் பாஸ் ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். ராஜுவுக்கு கிடைக்கும் ஓட்டுக்களை சிதைத்து பிரியங்காவை டைட்டில் வின்னராக அறிவிக்கப் போகிறார்கள் என்றும் கருத்துக்கள் பரவி வருகின்றன. ராஜுவின் ஆர்மி அவரை காப்பாற்றுமா? அல்லது பிக் பாஸ் டீமின் பிளான் என்ன என்பது இன்னும் இரு வாரங்களில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











