Don't Miss!
- Technology
இல்லத்தரசிகள் டேட்டிங் செய்கிறார்களா? இந்த Dating ஆப்ஸில் 'ஈ'யாக மொய்க்கும் ஆண்கள்/பெண்கள்.!
- News
இவ்வளவு பேரா? அமெரிக்காவில் அலறும் இந்தியர்கள்.. பறிபோகும் வேலைகள்.. ஐடி ஊழியர்கள் ஷாக்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த 6 வகை பெண்களை திருமணம் செய்து கொள்வது மரணத்தை விட கொடியதாம்...!
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ராஜுவின் குருநாதர்கள்.. பாக்கியராஜ் மற்றும் நெல்சனிடம் ஆசி வாங்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்!
சென்னை: சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையுடன் கோடம்பாக்கத்தில் வந்து இறங்கிய ராஜு ஜெயமோகன் இயக்குநர் பாக்கியராஜிடம் தான் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
விஜய் டிவியில் ஸ்க்ரிப்ட் ரைட்டராக நிகழ்ச்சிகளுக்கு பணியாற்றும் போது இயக்குநர் நெல்சனிடமும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டிலை வென்ற ராஜு அந்த வெற்றிக் கோப்பையை இருவரிடம் காண்பித்து ஆசி வாங்கி உள்ளார்.

ராஜயோகத்தில் ராஜு
பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள சொல்லி வந்த போன் காலில் இருந்தே ராஜு ஜெயமோகனின் வாழ்க்கையில் ராஜயோகம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். எந்தவொரு பெரிய சிக்கலும் இல்லாமல் போட்டியும் இல்லாமல் ராஜு எளிதாக மக்களின் அன்பை மட்டுமே பெற்று டைட்டிலை தட்டித் தூக்கினார்.

இனிமே சீரியல் இல்லை
விஜய் டிவியில் உதவி இயக்குநராகவும் ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் பேக்கெண்டில் பணியாற்றி வந்த ராஜு ஜெயமோகன் சில சின்னத்திரை தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சினிமா இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையை பிக் பாஸ் வீட்டில் ராஜு சொல்லி வந்த நிலையில், ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இயக்கவும் நடிக்கவும் அழைப்புகள் வரும் நிலையில், இனிமேல் சீரியலில் நடிக்கப் போவதில்லை என்கிற முடிவையும் ராஜு எடுத்துள்ளார்.

குரு பாக்கியராஜை சந்தித்து
இந்நிலையில், தற்போது தனது குருநாதர் இயக்குநர் பாக்கியராஜை சந்தித்து ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் டிராபியை அவரது கையில் கொடுத்து அவரது ஆசியை வாங்கி உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என பல கனவுகளுடன் சென்னை வந்து இறங்கிய ராஜு பாக்கியராஜிடம் தான் உதவி இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் நெல்சனிடமும்
சமீபத்தில் அளித்த பேட்டியில் தளபதி விஜய்யை பீஸ்ட் பட ஷூட்டிங்கில் சந்தித்து பேசினேன் எனக் கூறியிருந்தார். இயக்குநர் நெல்சனும் தனக்கு இயக்கத்தை கற்றுக் கொடுத்த குரு என சொல்லிய ராஜு ஜெயமோகன் தற்போது அவரையும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஷேர் செய்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.

பீஸ்ட் அப்டேட்
பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் உடன் ராஜு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரிடமும் பீஸ்ட் படத்தின் அப்டேட்டை கேட்டு வருகின்றனர். பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை நியூ இயர் முதல் எதிர்பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். குட்டி ஸ்டோரி பாடல் வெளியானது போல பிப்ரவரி 14ம் தேதி வெளியாகுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.