»   »  ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஆனார் ராஜு மகாலிங்கம்!

ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஆனார் ராஜு மகாலிங்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினிகாந்த்: தமிழருவி மணியன், ராஜு மகாலிங்கம்!

சென்னை: இதுவரை லைகா நிறுவன நிர்வாகியாக இருந்த ராஜூ மகாலிங்கம் இப்போது ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தவர் சுபாஷ்கரன்.

Raju Mahalingam gets big post in Rajini party

லைகாவின் சினிமா தயாரிப்புகளை முழுமையாகப் பார்த்துக் கொண்டவர் இவர்தான். ரஜினிகாந்த் நடிப்பில் 2.ஓ படம் உருவாகக் காரணமானவர்களுள் இவரும் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே ரஜினிக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்து படமெடுத்துக் கொண்ட நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டவர் ராஜு மகாலிங்கம்.

கடந்த டிசம்பர் மாதம் ரஜினி தனது தனிக் கட்சி முடிவை அறிவித்ததுமே, ராஜு மகாலிங்கம் லைகாவிலிருந்து வெளியேறினார். ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் கூட்டம், நிர்வாகிகள் தேர்வில் நிர்வாகி சுதாகருடன் இணைந்து செயல்பட்டார் ராஜு மகாலிங்கம்.

இப்போது அவரையே மக்கள் மன்றத்தின் செயலாளர் பொறுப்பில் நியமித்துள்ளார் ரஜினிகாந்த். விஎம் சுதாகர் மக்கள் மன்ற நிர்வாகியாகத் தொடர்கிறார்.

English summary
Rajinikanth has appointed Raju Mahalingam as Rajini Makkal Mandram secretary

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil