வெளியே வந்ததும் ராஜூ யாரை சந்தித்தார் தெரியுமா?... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ !

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ள ராஜு ஜெயமோகனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Finalist முதல் Post | எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல | Bigg Boss 5 Tamil

ராஜூ மோகன் தன்னை வெற்றி பெறவைத்த மக்களுக்கு ட்விட்டரில் உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி என கூறியுள்ளார். பிரியங்கா 2வது இடத்தை பிடித்தார்.

ராஜூ பாய்

ராஜூ பாய்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் ராஜூ. நிகழ்ச்சி தொடங்கி சிறிது நாட்களிலேயே ராஜூபாய் என அவரது ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாட தொடங்கி விட்டார்கள்.

அமைதியான குணம்

அமைதியான குணம்

ராஜூவின் எதார்த்தமான குணமும், அவரின் அமைதியும், அவரின் பெருந்தன்மையான குணம் மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தது. அதேபோல கோவத்தையோ, ஆத்திரத்தையோ, அன்பையோ சரியான நேரத்தில் போட்டியாளர்களிடம் வெளிப்படுத்தி பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் மனங்களை வென்றார்.

கோபால்

கோபால்

கிராண்ட் ஃபினாலேவில் கூட கோபால், கோபால் என வாய்நிறைய அழைத்தார் பிரியங்கா. அதேபோல, அக்ஷரா அண்ணா அண்ணா என்று பாசத்தோடு அழைத்தார். அதே போல அமீரும் இந்த வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தவர் ராஜூ என்றும், அவர் கூடவே இருக்க வேண்டும் என்று தோன்றுவதாக ஃபினாலே மேடையிலேயே கூறி இருந்தார்.

அனைவர் மனதிலும் இடம்

அனைவர் மனதிலும் இடம்

உண்மையில் அனைவர் மனதிலும் இடம்பிடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஆனால், இதை அசாத்தியமாக ராஜூ செய்து முடித்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்ளை கூறிவருகின்றனர்.

முதல் வேலையாக

முதல் வேலையாக

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிந்து வெளியே வந்த ராஜூ மோகன், முதல் வேலையாக அமீரின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பாசக்காரய்யா ராஜூ என கூறி அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X