எல்லோரும் தாமரையை காப்பாற்ற நினைப்பது ஏன்... உடைத்து சொன்ன ராஜு

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 16 வது நாளான நேற்று, இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் லக்சுரி பட்ஜெட் டாஸ்ட் நடத்தப்பட்டது. இதில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள 5 நாணயங்களை யாருக்கும் தெரியாமல் கைப்பற்ற வேண்டும்.

Recommended Video

4 மாதம் மகனை பார்க்கவில்லை கண் கலங்கிய Thamarai Selvi | Bigg Boss 5 Tamil

போட்டியின் முடிவில் யாரிடம் அதிக நாணயங்கள் உள்ளதோ அவரே வெற்றியாளர். அப்படி வெற்றி பெறும் போட்டியாளர் தன்னிடம் உள்ள பவரை வைத்து தன்னையோ அல்லது வேறு ஒருவரையோ இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என பிக்பாஸ் கூறினார். இதன்படி வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாணயங்களை கைப்பற்ற போட்டியாளர்கள் போட்டி போட்டனர்.

தாமரைக்கு நம்பிக்கை தரும் அபிஷேக்

தாமரைக்கு நம்பிக்கை தரும் அபிஷேக்

இதில் அபிஷேக், பிரியங்கா போன்றவர்கள் தாங்கள் தாமரையை கைப்பற்ற விளையாடுவதாகவும், தங்களுக்கு கிடைக்கும் நாணயத்தை வைத்து தாமரையை காப்பாற்ற போவதாகவும் பேசிக் கொள்கிறார்கள். இந்த விஷயத்தை தாமரையிடமும் நேரடியாக சொல்கிறார் அபிஷேக். நான் உன்னை காப்பாற்றுவேன் என தாமரைக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.

எல்லோரும் உன்னை காப்பாற்றுவார்களா

எல்லோரும் உன்னை காப்பாற்றுவார்களா

இந்நிலையில் இரவு நேரத்தில் கார்டன் ஏரியாவில் ராஜு, சிபி, இமான் அண்ணாச்சி, தாமரை ஆகியோர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அண்ணாச்சி, அபிஷேக்கிடம் ஒரு நாணயம் உள்ளது. ஆனால் அவர் அதை மறைக்கிறார் என்கிறார். தாமரையும் நான் கேட்டதற்கும் அப்படி தான் சொல்கிறார் என்றார். அப்போது சிபி, எல்லோரும் உன்னை காப்பாற்றுகிறேன் என்கிறார்கள் என்றால், உண்மையாக காப்பாற்றுகிறார்களா என்று பார்ப்போம் என்கிறார்.

உண்மையை உடைக்கும் ராஜு

உண்மையை உடைக்கும் ராஜு

அப்போது பேசும் ராஜு, நீ பணக்காரியாகவோ, பணக்கார வீட்டு வாரிசாகவோ இருந்தால், உனக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை என்றாலோ உன்னை யாரும் காப்பாற்ற நினைக்க மாட்டார்கள். ஆனால் அதே சமயம் நீ வறுமையில் இருந்து வந்தவள். நாடக கலைஞர். உனக்காக விளையாடினால் அது அவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். உன்னை காப்பாற்ற விளையாடுவதாக எட்டு இடத்தில் பதிவு செய்தால், அது ஒரு இடத்திலாவது காட்டப்படும் என நினைக்கிறார்கள் என்று உண்மையை உடைத்து சொல்கிறார்.

கேள்வி கேட்கும் நிரூப்

கேள்வி கேட்கும் நிரூப்

அங்கு வரும் நிரூப், தாமரையிடம், மற்றவர் நாணயத்தை எடுக்கும் போது சொல்லாதது யாருடைய தப்பு. நீ எதற்காக இந்த வீட்டிற்கு வந்தாய். சுத்தி பார்ப்பதற்கு தான வந்தாய். அப்போ இந்த வாரம் உன்னை வெளியே போக சொன்னால் நீ போய் விடுவாயா. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையா என கேட்கிறார். மூன்று பேர் எடுத்ததை நீ பார்த்துள்ளாய். நீ பார்த்த உடன் சத்தம் போட்டிருக்க வேண்டாமா என்கிறார்.

கிண்டல் செய்யும் ராஜு

கிண்டல் செய்யும் ராஜு

ராஜுவும், அண்ணாச்சியும் தாமரையை கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள். நீ பார்த்ததும், மற்றவர்கள் சொல்லி விடாதே. உனக்காக தான் எடுத்தேன் என சொல்லி உன்னை ஏமாற்றுகிறார்கள். அதை நம்பிக் கொண்டிருக்கிறாய் என்கிறார் ராஜு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X