இப்படி தான் வேணுமா...விளாசிய ராஜு...கண்ணீர் விட்டு தன்னை நியாயப்படுத்தும் சுருதி

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வாரங்களைக் கடந்து, நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மொத்தம் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ராஜா ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

நான்காவது வாரத்தின் முதல் நாளான நேற்று இந்த வாரத்திற்கான தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் பிரியங்கா மற்றும் மதுமிதா போட்டியிட்ட நிலையில், மதுமிதா வெற்றி பெற்றார்.

காயினை கைப்பற்றிய சுருதி

காயினை கைப்பற்றிய சுருதி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 23 வது நாளான இன்று, தாமரை உடை மாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் பாவனியின் உதவியுடன் சுருதி, காற்று காயினை கைப்பற்றினார். இதை பார்த்த தாமரை, சுருதியிடம் வாக்குவாதம் செய்கிறார். சுருதியும் தான் செய்ததை நியாயப்படுத்தி வாக்குவாதம் செய்கிறார். வீட்டில் உள்ள மற்றவர்கள் தாமரைக்கு ஆதரவாக சுருதி மற்றும் பாவனி செய்தது தவறு என சுட்டிக் காட்டுகிறார்கள்.

கண்ணீர் விடும் தாமரை

கண்ணீர் விடும் தாமரை

இப்படி விளையாடுவது சரியல்ல. இது ரொம்ப தவறான முறை என கோபப்பட்டு, கண்ணீர் விட்டு அழுகிறார் தாமரை. இது நம்பிக்கை துரோகம், நான் அப்படி இருக்கும் சமயத்தில் வந்து காயினை எடுப்பது கொஞ்சம் கூட சரியல்ல என விடாமல் அழுகிறார் தாமரை. வீட்டில் உள்ள அனைவரும் தாமரை மற்றும் சுருதியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இப்படி தான் வேண்டுமா

இப்படி தான் வேண்டுமா

அப்போது கார்டன் ஏரியாவில் சுருதியிடம், ராஜு, அபினய் உள்ளிட்டோர் விளக்கம் கேட்கிறார்கள். அப்போது ராஜு, உனக்கு அந்த காயின் வேண்டுமா. நீ கேட்டிருந்தால் தாமரையே கொடுத்திருப்பாரே என கேட்கிறார். அதற்கு சுருதி, அப்படி அந்த காயின் எனக்கு தேவையில்லை என்கிறார். அதற்கு ராஜு, அப்படியானால் இப்படி தான் உனக்கு அந்த காயின் வேண்டும் என்கிறார்.

தேம்பி அழும் சுருதி

தேம்பி அழும் சுருதி

ராஜு இப்படி கேட்டதும், கண்ணீர் விட்டு தேம்பி, தேம்பி அழுகிறார் சுருதி. மதுமிதா உள்ளிட்டோர் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள். வீட்டிற்குள் பாவனி மற்றும் சுருதி, தாங்கள் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எதையும் செய்யவில்லை. அவர் அஜாக்கிரதையாக அந்த காயினை கீழே வைத்திருந்தார் அதனால் தான் எடுத்தேன். அதை எடுப்பேன் என அவரிடமே பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால் அவர் என்னை தவறாக காட்ட முயற்சிக்கிறார் என்கின்றனர்.

மக்கள் பார்க்க வேண்டாமா

மக்கள் பார்க்க வேண்டாமா

ஆனால் தாமரையோ, எல்லாவற்றையும் கேம் என சொல்லாதீர்கள். கேம் என்றால் மக்களுக்கு தெரியும்படி வெளியில் கேமிரா இருக்கும் இடத்தில் எடுத்திருக்க வேண்டும். இப்போது நீ உள்ளே எடுத்ததால் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாமல் போய் விட்டது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X