106 நாட்களும் நீ இருக்கணும்.. பிக் பாஸையே வீட்டுக்கு அழைத்த ராஜுவின் அம்மா.. சரியான சரவெடி!

சென்னை: தாயை போல பிள்ளை நூலை போல சேலை என சொல்வது போலவே ராஜு பாய் அப்படியே அவரது அம்மாவை போலவே இருக்கிறார்.

முதலில் மனைவி தாரிகா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போது அம்மா வந்துருக்காங்களா என்பதையே திரும்ப திரும்ப அவர் கேட்டாலும், இல்லை என அழகாக தாரிகா மறைத்தது போலவே ராஜுவின் அம்மா உள்ளே வந்த பிறகும் ராஜுவுக்கு தெரியாமல் விளையாடிய சின்ன கண்ணாமூச்சி ஆட்டம் கலக்கல்.

என் மகன் 106 நாட்கள் இந்த வீட்டில் இருக்கணும் என சரவெடி பட்டாசாக ராஜுவின் அம்மா பேசியது ராஜுவின் ஆர்மியை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ஆட்டம் காட்டிய அம்மா

ஆட்டம் காட்டிய அம்மா

மனைவி தாரிகாவை இத்தனை நாட்கள் கழித்து பார்த்த நிலையில் கட்டி அணைத்து காதல் மழையை பெய்து விட்ட ராஜு அந்த நேரத்திலும் அம்மாவை பற்றியே பேசிக் கொண்டு இருந்தார். ராஜுவுக்கு நகைச்சுவை உணர்வு எங்கிருந்து வந்திருக்கும் என்பது இப்போது ரசிகர்களுக்கு புரிந்திருக்கும். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிறகும் சில நிமிடங்கள் ராஜுவுக்கு தெரியாமல் நல்லாவே ஆட்டம் காட்டினார்.

அழுத ராஜு

அழுத ராஜு

அம்மாவை பார்த்ததும் கண்ணீர் கடலில் மூழ்கி விட்டார் ராஜு. ராஜுவின் நீண்ட முடி அவரது அழுகையை மறைக்கும் நல்ல கேடயமாக உதவி வருகிறது. அம்மா மற்றும் மனைவியை பார்த்த சந்தோஷத்தில் ராஜுவுக்கு புது தெம்பே கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

106 நாட்கள் இருக்கணும்

106 நாட்கள் இருக்கணும்

ராஜுவிடம் அவரது அம்மா சந்திரிகா இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் நீ 106 நாட்கள் இருந்து வெற்றி பெற்று விட்டு வர வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்த உடனே நிரூப் அவன் வந்துடுவான் அவன் கூட வேற யாரு 106 நாட்கள் இருப்பாங்கன்னு சொல்லிட்டு போங்கம்மா என கேட்க, எனக்கு என் மகன் வரணும்னு ஆசை மத்தவங்களாம் போட்டி போட்டு வாங்க என ஒரே போடாக போட்டு விட்டார்.

பிரியங்காவுக்கு நோஸ் கட்

பிரியங்காவுக்கு நோஸ் கட்

பாத்திரத்தை நானே கழுவி வச்சிடுறேன் மா என ராஜு பாத்திரம் கழுவ வில்லை என சண்டை போட்ட பிரியங்காவுக்கு நோஸ் கட் கொடுக்கும் விதத்தில் ராஜுவின் அம்மா சொல்ல நானே கழுவிடுறேன் அம்மா வேணாம் என பிரியங்கா பாத்திரங்களை கழுவ சென்றார்.

வீட்டுக்கு வாங்க பிக் பாஸ்

வீட்டுக்கு வாங்க பிக் பாஸ்

இதுவரை பிக் பாஸ் வீட்டுக்கு வந்த அனைவரும் நன்றி பிக் பாஸ் என்று மட்டுமே சொன்ன நிலையில், முதல் முறையாக ராஜுவின் அம்மா பிக் பாஸ் நீங்களும் வீட்டுக்கு வாங்க என அன்போடு அழைத்தது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. பாவனி நீ ஏன் மா தள்ளி போய் இருக்க என்றும் பக்கத்தில் வாம்மா என வார்த்தைக்கு வார்த்தை சிக்சர் அடித்து கலக்கி விட்டார் ராஜுவின் அம்மா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X