பிக்பாஸ் ராஜுவா இது... கல்லூரி கால ஃபோட்டோவை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 முக்கியமான போட்டியாளராகவும், ஃபைனல்ஸ் வரை செல்வார் என்றும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுபவர் ராஜு ஜெயமோகன். இவரின் கல்லூரி கால ஃபோட்டோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தின் குறும்படங்கள் இயக்கி, பிறகு சினிமாவில் சேர்ந்து அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி, விஜய் டிவி தொகுப்பாளராகி புகழ்பெற்றவர் ராஜு. தொகுப்பாளராக இருந்தவர் பிறகு சீரியல்களிலும் நடிக்க துவங்கினார். சீரியல்களை தொடர்ந்து, சினிமாவிலும் கால் பதித்தார்.

சிரிக்க வைத்த ராஜு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ராஜு நடித்த சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்டார் ராஜு. முதல் நாள் முதலே ஃபன் செய்து, வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல பார்ப்பவர்கள் அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார் ராஜு.

முதல் ஆளாக சேவ்ட்
பலரின் ஃபேரைட் போட்டியாளராக மாறி விட்டதால் தான் நாமினேஷனுக்கே ராஜு செய்வதில்லை. அப்படியே சென்றாலும் மக்கள் ஓட்டளித்து முதல் ஆளாக அவரை நாமினேஷனில் இருந்து காப்பாற்றி விடுகிறார்கள். இது மற்ற போட்டியாளர்களுக்கு பொறாமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்து வருகிறது.

கல்லூரி கால ஃபோட்டோ
ராஜு தான் கடந்து வந்த பாதை பற்றி கூறும் போது, கல்லூரியில் நடந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்ட போது அதில் தான் சரியாக எடிட் செய்யவில்லை என்றும், அதில் நடுவராக இயக்குனர் கே.பாக்யராஜ் வந்ததாகவும், அதில் முதல் பரிசு தனக்கு கிடைத்ததாகவும் அவரே சொல்லி உள்ளார். அந்த மேடையில் பாக்யராஜுடன் இணைந்து, ராஜு முதல் முறையாக எடுத்துக் கொண்ட ஃபோட்டோ தற்போது வெளியாகி உள்ளது.

ஆச்சரியப்படும் ரசிகர்கள்
ஏற்கனவே ராஜு மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டதால் அவரின் வாழ்க்கை, காதல், திருமணம், குடும்பம் பற்றிய விபரங்களையும் தேடி கண்டுபிடித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ராஜு ஆர்மியையும் துவக்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











