திருக்குறள் கற்றுக் கொடுக்கும் ராஜு... கடுப்பாகி சிபியிடம் கத்தும் அக்ஷரா

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் எட்டாவது வாரத்தில் லக்சுரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாறி உள்ளது. இதில் கண்டிப்பான வார்டனாக சிபி செயல்படுகிறார்.

தமிழ் வாத்தியாராக ராஜுவும், ஞாபக மறதி உள்ள வாத்தியாராக அபிஷேக்கும், டான்ஸ் மாஸ்டராக அமீரும் இருக்கிறார்கள். மற்றவர்கள் பள்ளி மாணவர்களை போல் உடையணிந்து டாஸ்க் செய்து வருகிறார்கள். குறும்புத்தனம் செய்யும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கி வருகின்றனர்.

திருக்குறள் கற்றுத்தரும் ராஜு

திருக்குறள் கற்றுத்தரும் ராஜு

நிகழ்ச்சியின் 52 வது நாளான இன்று காலை டாஸ்க் துவங்கியதுமே குளிப்பதற்காக கிளம்பிக் கொண்டிருக்கும் அக்ஷராவை அழைத்து, அவர் உடனடியாக 5 திருக்குறள்களை கற்றுக் கொண்டு, மனப்பாடமாக சொல்ல வேண்டும் என்கிறார் சிபி. தமிழ் ஆசிரியரான ராஜுவிடம் திருக்குறள் கற்றுக் கொடுக்க சொல்கிறார்.

போராடி கற்கும் அக்ஷரா

போராடி கற்கும் அக்ஷரா

அக்ஷராவும் கஷ்டப்பட்டு திருக்குறளை கற்றுக் கொண்டு, ஒவ்வொன்றாக சிபியிடம் சொல்லி காண்பிக்கிறார். மூன்று குரல்களை கற்றுக் கொண்ட நிலையில், கவனமாக கற்றுக் கொடுப்பதை கேட்க வேண்டும் என்கிறார் ராஜு. எழுதினால் ஈஸியாக இருக்கும் என்கிறார் அக்ஷரா. நான் சொல்வதை கற்றுக் கொள்ள முடியுமா, முடியாதா என்கிறார் ராஜு.

தெலுங்கு டயலாக் நீங்க கத்துக்கனும்

தெலுங்கு டயலாக் நீங்க கத்துக்கனும்

பதிலுக்கு அக்ஷரா, நான் கற்றுக் கொள்கிறேன் சார். ஆனால் டாஸ்க் முடிந்ததும் தெலுங்கில் நான் ஒரு டயலாக் கற்றுத் தருவேன். அதைத் கற்றுக் கொண்டு நீங்களும் சொல்ல வேண்டும் என்கிறார். இப்படி வில்லங்கமாக பேசினால் எனக்கு எரிச்சலாகும் என்றும் ராஜுவிடம் சொல்கிறார் அக்ஷரா.

பாவம் அந்த புள்ள

பாவம் அந்த புள்ள

பிறகு எழுத வைத்து 5 குறள்களையும் கற்றுக் கொடுக்கிறார் ராஜு. தான் எழுதி முடித்துவிட்டு சாப்பிடுவதாக சொல்கிறார் அக்ஷரா. ஆனால் குளித்து விட்டு தான் சாப்பிட வேண்டும் என சொல்லும் சிபி, குளித்து விட்டு வந்தவுடன் திருக்குறள் ஐந்தையும் சொல்ல வேண்டும் என்கிறார். அப்போது குறுக்கிடும் இமான் அண்ணாச்சி, திருக்குறளா, என்னாலையே முடியாது. அந்த புள்ள எப்படி சொல்லும் என்கிறார்.

அக்ஷராவை அவசரப்படுத்தும் சிபி

அக்ஷராவை அவசரப்படுத்தும் சிபி

குளிக்க கிளம்பும் அக்ஷராவிடம் சீக்கிரம் வாங்க, டைம் இல்லை என்கிறார்.இதனால் கோபமாகும் அக்ஷரா, திருக்குறள் படிக்க சொல்றீங்க. ரெடியாக சொல்றீங்க. டாஸ்க் கொடுக்கறீங்க. டைம் கொடுங்க. அப்புறம் டைம் இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும் என சிபியிடம் கேட்டு விட்டு, கோபமாக சென்று பாத்ரூம் ஏரியாவில் இருக்கும் பூச்சாடியை உடைக்கிறார் அக்ஷரா.

ஆத்திரத்தில் கத்தும் அக்ஷரா

ஆத்திரத்தில் கத்தும் அக்ஷரா

டிரெசிங் ரூமிற்குள் சென்று தன்னை தானே தாக்கிக் கொள்ளும் அக்ஷராவை சமாதானம் செய்ய போகிறார்கள் வருண் மற்றும் அபினய். ஆனால் அவர்களிடம் சிபி பற்றி ஆத்திரத்தில் கத்துகிறார் அக்ஷரா. அங்கு வரும் சிபி மற்றும் ராஜுவிடமும், எதுவும் செய்ய முடியாது என் இஷ்டம் என சொல்லி கத்துகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X