பிசிக்கல் டாஸ்க் பண்ண வராது.. அதுக்காக அந்த விஷயத்தை செய்ய போறேன்.. ராஜுவின் நியூ இயர் ரெசல்யூஷன்!
சென்னை: ஹேப்பி நியூ இயர் பாடலுடன் என்ட்ரி கொடுத்த உலகநாயகன் கமல் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்கு பின்னர் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்களை சந்தித்துப் பேசினார்.
அனைவரும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்ல உங்களுடைய நியூ இயர் ரெசல்யூஷன் என்ன என கமல் கேட்டார்.
ஒவ்வொரு ஹவுஸ்மேட்களும் தங்களின் நியூ இயர் ரெசல்யூஷனை சொல்ல ராஜு தனக்கு பிசிக்கல் டாஸ்க் பண்ண வராது என்பதை ஓப்பனாக சொல்லி பாராட்டுக்களை அள்ளினார்.

ஹேப்பி நியூ இயர் என்ட்ரி
சகலகலா வல்லவன் படத்திற்கு ஒவ்வொரு புத்தாண்டும் இளமை இதோ இதோ பாடல் இல்லாமல் நடப்பது இல்லை என்பது போல மாறிவிட்டது. கமல் சாரே தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹேப்பி நியூ இயர் பாடல் இசைக்காமல் விட்டு விடுவார்களா? கலக்கலாக அந்த பாடலின் இசையுடன் உள்ளே நுழைந்தார் கமல்.

ராஜுவின் ரெசல்யூஷன்
இந்த புத்தாண்டில் இருந்து ஜிம்முக்கு போய் நல்லா உடம்பை ஏத்தணும் சார் என ராஜு ஜெயமோகன் தனது புத்தாண்டு ரெசல்யூஷனை சொல்ல ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் கமல் உள்பட அவரை வித்தியாசமாக பார்த்தது. நியூ இயர் அதுவுமா ஜிம் வாசலில் போய் ஃபீஸ் எவ்ளோன்னு கேட்கும் அந்த ஆளா நீ என்பது போல ரசிகர்களும் பார்த்து சிரித்தனர்.

பிசிக்கல் டாஸ்க் பண்ண வராது
பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் பிசிக்கல் டாஸ்க் பண்ணும் போது நமக்கும் ஸ்ட்ராங்கான உடம்பு இருந்திருந்தால் நாமும் பிசிக்கல் டாஸ்க் நல்லா பண்ணியிருக்கலாமேன்னு தோணுது சார் என வெளிப்படையாகவே தன்னிடம் இருக்கும் குறையை தயங்காமல் சொல்லி ஸ்கோர் செய்தார் ராஜு.

போன வருஷமே பண்ணியிருக்கணும்
ராஜு சொன்னதை கேட்ட கமல் அடுத்த வருஷமாவது வேற ரெசல்யூஷனை சொல்லுங்க வெளியே போன பிறகு சரியான ஜிம் பார்ட்னர் உடன் ஜிம்முக்கு போங்க என்று கலாய்த்தார். போன வருஷம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முயற்சிக்கும் போதே ஜிம்முக்கு எல்லாம் போயிட்டு ரெடியாக வந்திருக்கக் கூடாதா என ரசிகர்களும் பங்கம் பண்ணி வருகின்றனர்.

ராஜு ஓட்டுப் போட சொல்லல
ராஜு பிசிக்கல் டாஸ்க் பண்ண தெரியாது என வெளிப்படையாக சொன்ன நிலையில், மிக்சர் தின்பவரை எல்லாம் டைட்டில் வின்னர் ஆக்கிடுங்க என சில ஹேட்டர்கள் கதறி வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே ராஜு யாரிடமும் ஓட்டு கேட்கவில்லை. அவரை பிடித்துப் போய் மக்கள் தான் அதிகளவில் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிசிக்கல் டாஸ்க் விளையாடினால் மட்டுமே பிக் பாஸ் டைட்டில் வின்னர் கிடைத்து விடும் என்கிற பிம்பத்தை கடந்த சீசன்களிலும் போட்டியாளர்கள் உடைத்து நொறுக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











