Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதிக கோப்பைகளுடன் ராஜு பாய் அசத்தல்.. இமான் அண்ணாச்சிக்கு இப்படி ஆகிடுச்சே.. இப்படியே நீடிக்குமா?
சென்னை: இந்த சீசனில் கடைசி வரை யார் உங்க கூட வருவார்கள் என நினைக்கிறீங்களோ அவங்களுக்கு வெற்றி கோப்பையையும் யார் வரவே மாட்டாங்க உடனடியா வெளியே போவாங்க என நினைக்கிறீங்களோ அவங்களுக்கு ஜீரோ காயினையும் கொடுங்கள் என சின்னதாக ஒரு போட்டு வாங்கும் கேமை கமல் ஆடினார்.
அதிக கோப்பைகளுடன் ராஜு பாய் அசத்திய நிலையில் அவரை ஆஃப் பண்ணுவது போல கமல் ஒரு வார்த்தை சொன்னார்.
7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் படம் இயக்கும் பிளாக்பஸ்டர் இயக்குர்.. இன்றைய டாப் 5பீட்ஸில்!
அதே போல ஜீரோக்களை பெற்ற இமான் அண்ணாச்சியின் உச்சி குளிரவும் வைத்தார் கமல்.

டிராபி கேம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 49 நாட்களை கடந்து விட்ட நிலையில், கடைசி வரை இந்த வீட்டில் யார் இருப்பார்கள் என நினைக்கிறீங்களோ அவங்களுக்கு கோப்பையும் யார் இந்த வீட்டில் இருக்கவே கூடாது என நினைக்கிறீங்களோ அவங்களுக்கு ஜீரோ காயினையும் கொடுங்க என கமல் டிராபி கேம் ஆடினார்.

ராஜுவுக்கு 4 கப்
டிராபி கேமில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு பிடித்த நபருக்கு கப்பையும் பிடிக்காதவர்களுக்கு ஜீரோவையும் பரிசாக அளித்தனர். அதிகமாக ராஜு ஜெயமோகனுக்கு 4 வெற்றி கோப்பைகள் கிடைத்தன. கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் ராஜு இருப்பார் என சக போட்டியாளர்களும் அவரும் தீவிரமாக அதை நம்புகின்றனர்.

தலா 3 கப்
ராஜு ஜெயமோகனை தொடர்ந்து அடுத்த இடத்தில் நிரூப் மற்றும் பிரியங்கா இடையே கடும் போட்டி நிலவியது. இருவருக்கும் தலா 3 வெற்றி கோப்பைகள் சக போட்டியாளர்களிடம் இருந்து கிடைத்தன. நண்பர்களான இருவரும் கடைசி வரை வருவார்கள் என எதிர்பார்த்து விளையாடி வருகின்றனர்.

இருவருமே இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவில் ரசிகர்களை தாண்டி ஆர்மி எல்லாம் வைத்திருக்கும் பாவனி மற்றும் அக்ஷராவை இந்த ஆட்டத்திலேயே யாருமே சேர்த்துக் கொள்ளவில்லை. தாமரை மற்றும் இமானுக்கு கிடைத்த கோப்பைகளில் ஒன்று கூட பாவனி மற்றும் அக்ஷராவுக்கு கிடைக்கவில்லை.

அண்ணாச்சி ஜீரோ
தாமரைக்கு ஒரு ஜீரோவை ராஜு கொடுத்ததற்கே காரணம் சொல்லுப்பா என கேட்டு என்னவாய் பேச வேண்டும் என கமல் முன்பாக டோஸ் எல்லாம் வாங்கியும் பலே கில்லாடியாக நடித்தார். ஆனால், இமான் அண்ணாச்சி பல ஜீரோக்களையும் வாங்கிக் கொண்டு சிரித்த அவருக்கு இது இப்படியே இருக்காது அதற்கு முன்னதாக '1' போட நீங்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.