»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சிம்ரனால் கழற்றிவிடப்பட்ட ராஜூ சுந்தரம் தனது சொந்த மாநிலமான கர்நாடகத்தைச் சேர்ந்த பெண்ணை மணக்கிறார்.

பிரபு தேவாவின் அண்ணனான ராஜூ சுந்தரம் டான்ஸ் மாஸ்டரில் இருந்து ஹீரோ ஆனார். சிம்ரனும் இவரும் காதலித்து வந்தனர்.ஆனால், என்ன காரணமோ இவரை சிம்ரன் கழற்றிவிட்டார்.

இதையடுத்து வீட்டிலேயே இவருக்குப் பெண் பார்த்தனர். இவரது சொந்த மாநிலமான கர்நாடகத்தின் மைசூர் மாவட்டத்தில்உள்ள தலைக்காவரியைச் சேர்ந்த நிச்சிதா என்ற பெண் இவருக்கு நிச்சயிக்கப்பட்டார்.

பி.ஏ. இறுதியாண்டு பயிலும் கல்லூரி மாணவியான நிச்சிதா- ராஜூ சுந்தரத்தின் திருமணம் பிப்ரவரி 3ம் தேதி மைசூரில் உள்ளதிரிபுர சுந்தரி கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. இந்த மண்டபம் பிரபு தேவாவுக்குச் சொந்தமானது.

தமிழ் சினிமாவில் சேர்த்த பணத்தில் கர்நாடகத்தில் சொத்துக்கள் குவிப்பதில் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர்கள் கில்லாடிகள்என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...