»   »  என்னிடம் உதவியாளராக இருந்தும் ராஜுமுருகன் எதையுமே கத்துக்கவில்லை: லிங்குசாமி

என்னிடம் உதவியாளராக இருந்தும் ராஜுமுருகன் எதையுமே கத்துக்கவில்லை: லிங்குசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜுமுருகன் தன்னிடம் உதவி இயக்குனராக இருந்தும் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லிங்குசாமியிடம் உதவியாளராக இருந்தவர் ராஜுமுருகன். குக்கூ படம் மூலம் இயக்குனரான ராஜு முருகன் தற்போது ஜோக்கரை வெளியிட்டு நம்மை எல்லாம் ஃபீல் பண்ண வைத்துவிட்டார்.


இந்நிலையில் ஜோக்கர் படத்தை பார்த்த லிங்குசாமியால் தனது சிஷ்யனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ராஜு குறித்து லிங்குசாமி கூறியிருப்பதாவது,


ஜோக்கர் போஸ்டர்

ஜோக்கர் போஸ்டர்

சின்ன டாய்லெட் அருகே குரு சோமசுந்தரம் அமர்ந்திருக்கும் ஜோக்கர் போஸ்டரை பார்த்தபோது இது எல்லாம் ஒரு போஸ்டரா?. நல்லபடியாக ஏதாவது டிசைன் செய்து போஸ்டராக போட்டிருக்கலாமே என நினைத்தேன்.


முக்கியமான படம்

முக்கியமான படம்

ஜோக்கர் படத்தை பார்த்தேன். இப்படியும் ஒரு படத்தை யோசிக்க முடியுமா, எடுக்க முடியுமா என்பதை எல்லாம் தாண்டி எந்த பார்முலாவிலும் சிக்காமல் முக்கியமான படமாக ஜோக்கரை எடுத்து பார்க்க வைத்துவிட்டார் ராஜு.


ராஜுமுருகன்

ராஜுமுருகன்

ராஜுமுருகன் என்னிடம் உதவி இயக்குனராக இருந்தும் அவர் என்னிடம் இருந்து எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. அவர் வேறு எங்கிருந்தோ கற்றுக் கொண்டு வித்தியாசமான விஷயத்தை சொல்ல வருகிறார். ஜோக்கர் ஒரு புதுமையான படம், தைரியமான படம். நான் தான் ராஜுவிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளேன். அவர் என் உதவி இயக்குனர் என்பதை நினைத்து பெருமையாக உள்ளது.


வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ஜோக்கர் என்கிற முக்கியமான படத்தை துணிச்சலாக தயாரித்த பிரபுவுக்கும், பிரகாஷுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை எடுக்க ராஜுவுக்கு மிகவும் துணிச்சல் இருந்திருக்க வேண்டும். இந்த படம் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பாகும் என நம்புகிறேன்.
பார்க்கவில்லை

பார்க்கவில்லை

ஆமீர் கான் இந்த படத்தை பார்த்துவிட்டு இந்தியில் எடுக்கலாம் என நம்புகிறேன். இத்தகைய படத்தை தமிழ் சினிமாவில் பார்க்கவில்லை என்று கூறுவோமே அத்தகைய படம் தான் ஜோக்கர்.


English summary
Director Lingusamy said that his former assistant Rajumurugan hasn't learnt anything from him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil