»   »  போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி நடிகை 'எஸ்கேப்'

போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி நடிகை 'எஸ்கேப்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

லூதியானா: ராமாயணத்தை எழுதிய வால்மீகியை அவமதித்த வழக்கில் நடிகை ராக்கி சாவந்த் கைது செய்யப்படவில்லையாம். அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

சர்சையின் செல்லப்பிள்ளை பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். நேரம் கிடைக்கும் போது எல்லாம் நடிகை சன்னி லியோனை கடுமையாக விமர்சித்து வருபவர்.

பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய உடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

வால்மீகி

வால்மீகி

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரை அவர் அவமதித்து பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

நீதிமன்றம்

நீதிமன்றம்

வால்மீகி முனிவரை அவமதித்த வழக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் ராக்கி நேரில் ஆஜராகவில்லை.

பிடிவாரண்ட்

பிடிவாரண்ட்

கடந்த 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் ராக்கி நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். பஞ்சாப் போலீசார் நேற்று மும்பை வந்து ராக்கியை கைது செய்ததாக செய்திகள் வெளியாகின.

ராக்கி

ராக்கி

மும்பை முகவரியில் ராக்கி இல்லாததால் அவரை கைது செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் ராக்கி போலீசில் சரண் அடைந்துவிட்டதாக அவரின் ஆட்கள் கூறுகிறார்கள்.

தலைமறைவு

தலைமறைவு

ராக்கி தற்போது எங்கு உள்ளார் என்று தெரியாமல் போலீசார் குழம்புகிறார்கள். மும்பையில் அவர் இல்லாததால் பஞ்சாப் போலீசார் திரும்பிச் சென்றுள்ளனர். ராக்கி வழக்கு வரும் 10ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Punjab police said that they have not arrested actress Rakhi Sawant for her offensive remarks against sage Valmiki.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil