ரசிகர்கள் ராகுலுடன் இனி சாட் செய்யலாம் : ரகுல் ஆப்- வீடியோ
சென்னை : 'சூர்யா 36' படத்தின் ஹீரோயினாக நடிகை ரகுல் பிரீத் சிங் கமிட்டாகியுள்ளார். தமிழ், தெலுங்கு என பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்தியுடன் அவர் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் ஹிட்டானது.
ரகுல் பிரீத் சிங் சிறுவயதில் ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் பற்றி பல புத்தகங்களைப் படிப்பாராம். இதனால் மனதுக்குள் எப்போதும் ஆன்மீக உணர்வுகள் இருப்பதால் தனக்கு நல்ல விஷயங்கள் எல்லாம் தானாகவே அமைந்து விடுகிறது எனக் கூறியுள்ளார்.
மேலும், நடிகையாக வேண்டும் என்று அவருக்கு எந்த பிளானும், ஆசையும் இருந்ததில்லையாம். பாக்கெட் மணிக்காக தான் சினிமாவுக்கே வந்தேன் என ரகுல் பிரீத் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது ரசிகர்களுக்காக புதிய மொபைல் ஆப் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் ரகுல். நியூயார்க்கை சேர்ந்த நிறுவனத்தின் உதவியோடு இந்த ஆப்பை உருவாக்கி இருக்கிறார் ரகுல்.
இந்த மொபைல் ஆப் மூலமாக ரகுலுடன் ரசிகர்கள் நேரடியாக உரையாடலாமாம். இந்த ஆப்பில் ரகுல் பிரீத் சிங் பற்றிய தகவல்களும், அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் கருத்துகளும் கூட இடம்பெற்றிருக்குமாம்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.