»   »  விஷாலுக்கு 'நோ' சொல்லிட்டு ரெட்டி மகள் திருமண விழாவில் ஆடிய நடிகை: சம்பளம் ரூ.1 'சி'

விஷாலுக்கு 'நோ' சொல்லிட்டு ரெட்டி மகள் திருமண விழாவில் ஆடிய நடிகை: சம்பளம் ரூ.1 'சி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சுரங்க மாபியா ஜனார்தன ரெட்டி மகளின் திருமண விழாவில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடனமாடியுள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் மக்கள் சில்லரை இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சுரங்க மாபியா ஜனார்தன ரெட்டியின் மகளுக்கு பெங்களூரில் ரூ.500 கோடி செலவில் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமண விழாவில் பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளனர்.

ராகுல் ப்ரீத் சிங்

தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட திருமண விழாவில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடனம் ஆடியுள்ளார். இந்த விழாவில் ஆட அவருக்கு ரூ.1 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

சம்பளம்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் ராகுல் ப்ரீத் சிங் படம் ஒன்றுக்கு ரூ.1 கோடி வாங்குகிறார். அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை நேற்று ஒரு நாளில் சம்பாதித்துவிட்டார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார். இந்நிலையில் ரெட்டி வீட்டு திருமண விழாவில் ஆட நாடு திரும்பினாராம்.

பிரம்மானந்தம்

பிரம்மானந்தம்

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் ரெட்டி வீட்டு விழாவில் கலந்து கொண்டார். தெலுங்கு நடிகர்கள் ராணா மற்றும் ரவிதேஜா ரெட்டி வீட்டு விழாவுக்கு வர மறுத்துவிட்டனர்.

English summary
Actress Rakul Preet Singh danced at Gali Janardhan Reddy daughter's wedding held in Bengaluru.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil