Rakul Preet Singh: ரகுல் ப்ரீத் சிங் ஒட்டிக் கொண்ட ஸ்டெம் செல் பேட்ச்.. காரணம் தெரிந்தால் அசந்துடுவீங்க!

மும்பை: நடிகை ரகுல் ப்ரீத் சிங், இந்திய சினிமாவில் குறிப்பாக பாலிவுட் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் இவர் மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த பேட்ச் பலரது கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவரது கழுத்தில் அவர் ஒட்டிக் கொண்டுள்ள பேட்ச் என்ன? அதை எதற்காக அவர் ஒட்டியுள்ளார்? அதன் விலை எவ்வளவு என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

ரகுல் ப்ரீத் சிங் அவரது கழுத்தில் அணிந்துள்ள பேட்ச் ஸ்டெம் செல் பேட்ச். இதை அவர் எதற்காக ஒட்டியிருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை என்றாலும், எந்தெந்த காரணங்களுக்காக எல்லாம் இந்த ஸ்டெம் செல் பேட்ச்களை ஒட்டிக் கொள்வார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

Rakul Preet Singh was recently spotted at the Mumbai airport wearing a mysterious patch on her neck
Photo Credit:

ஸ்டெம் செல் பேட்ச்கள் உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும், செல்களில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை குணப்படுத்தவும் உதவுகின்றன. இவை உடலின் இயற்கையான குணப்படுத்தும் திறனை மேம்படுத்த உதவுகிறது என்று கூறப்படுகிறது. மூட்டு வலி, தசை வலி அல்லது நாள்பட்ட வலிகளை குறைக்க இந்த பேட்ச்கள் பயன்படுத்தப்படலாம். இவை உடலில் ஸ்டெம் செல்களின் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.

தோல் பராமரிப்பு: புண்கள், காயங்கள் அல்லது சேதமடைந்த திசுக்களை மீட்டெடுக்க உதவுவதற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தோல் மற்றும் மென்மையான திசுக்களை குணப்படுத்துவதில் இவை பயனுள்ளதாக இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. சில வகையான ஸ்டெம் செல் பேட்ச்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதைப் போல உருவாக்கப்படுகிறது. சிலர் இந்த பேட்ச்களை தோல் பராமரிப்பு மற்றும் தோல் வயதானவரைப் போல தோற்றம் அளிப்பதை தடுக்க எடுக்கப்படும் ஒரு சிகிச்சையின் ஒரு அங்கமாக பயன்படுத்துகின்றனர். இதனால் தோலின் இளமையை பராமரிக்கவும், சுருக்கங்களை குறைக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

Rakul Preet Singh was recently spotted at the Mumbai airport wearing a mysterious patch on her neck
Photo Credit:

விலை: பேட்ச்களின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து முழுமையான அறிவியல் ஆதாரங்கள் இன்னும் ஆராய்ச்சியில் உள்ளன. எனவே இவற்றை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம் என்று மருத்துவர்களால் அறிவுருத்தப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில், 30 பேட்ச்கள் கொண்ட பேக் கிட்டத்தட்ட ரூபாய் 13 ஆயிரங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏதாவது ஒரு காரணத்தினால்தான் ரகுல் ப்ரீத் சிங் ஸ்டெம் செல் பேட்ச் ஒட்டிக் கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X