என்ன அண்டா சைஸ்ல இருக்காரு ஆதிபுருஷ்.. இவரு ராமரா.. பிரபாஸை ட்ரோல் செய்யும் ராம்சரண் ஃபேன்ஸ்!

ஹைதராபாத்: டோலிவுட்டின் டார்லிங் பிரபாஸின் ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக்கை ராம்சரண் ஃபேன்ஸ் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ராஜமெளலி இல்லை என்றால் பிரபாஸ் வெறும் டம்மி பீஸ் தான் போல என ட்ரோல்கள் பறக்கின்றன.

ஆர்ஆர்ஆர் படத்தில் ராஜமெளலி ராம்சரணை எப்படி காட்டி இருப்பார். ஓம் ராவத் என்ன இப்படியொரு ராமரை காட்டி உள்ளாரே என கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக்

ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக்

தன்ஹாஜி படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடித்து வருகிறார். சீதையாக க்ரித்தி சனோனும் ராவணனாக சைஃப் அலி கானும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வெளியான ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக்கை நெட்டிசன்கள் மரண பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

எந்த ராமர் பெஸ்ட்

எந்த ராமர் பெஸ்ட்

ஆதிபுருஷின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பே பாதியாக குறைந்து விட்டதாக ட்ரோல்கள் பறக்கத் தொடங்கி உள்ளன. இந்த ஆண்டு வெளியான ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் ராம்சரண் ராமராகவே மாறி இருப்பார். அந்த காட்சியையும் பிரபாஸின் ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக்கையும் பதிவிட்டு எந்த ராமர் லுக் பெஸ்ட் என ராம்சரண் ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்து விட்டனர்.

ராஜமெளலி இல்லைன்னா

ராஜமெளலி இல்லைன்னா

பாகுபலி படத்தில் வில்லேந்தி நிற்கும் பிரபாஸின் லுக்கிற்கும் ஆர்ஆர்ஆர் ராம்சரண் லுக்கிற்கும் போட்டி போட்டு பாருங்கள் யாரு மாஸ்ன்னு தெரியும் என பிரபாஸ் ரசிகர்கள் ஆதிபுருஷை விட்டு விட்டு பாகுபலி பக்கம் திரும்பிய நிலையில், அப்போ ராஜமெளலி இல்லைன்னா பிரபாஸ் வெறும் டம்மி பீஸா, பாகுபலி படத்திற்கு பிறகு எந்த படமும் ஓடவில்லையே என ட்ரோல் செய்து வருகின்றனர்.

கெட்டப் முக்கியமில்லை

கெட்டப் முக்கியமில்லை

ராமர் என்றால் கெட்டப் முக்கியம் இல்லை. நல்ல கேரக்டர் தான் முக்கியம். அது எங்கள் பிரபாஸிடம் அதிகமாகவே உள்ளது என ட்ரோல் செய்யும் ராம்சரண் ரசிகர்களுக்கு பிரபாஸ் ரசிகர்கள் பாகுபலி படத்தின் காட்சிகளையும் ராமாயண கதை காட்சிகளையும் ஷேர் செய்து பதிலடி கொடுத்து வருகின்றன்ர்.

செருப்பு போட்டுருக்காரே

செருப்பு போட்டுருக்காரே

காட்டுக்கு வரும் போதே தம்பி பரதனிடம் ராமர் காலணிகளை கொடுத்து விடுவாரே. அப்புறம் எப்படி இங்கே ராமர் செருப்பு போட்டு இருக்காரு என பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து இது எங்க ராமரே கிடையாது என ராம பக்தர்கள் விளாசி வருகின்றனர்.

ராமரா? ராவணனா?

ராமரா? ராவணனா?

பிரபாஸின் ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூம் செய்து என்ன பிரபாஸ் இப்படி பருமனாக இருக்காரே என்றும் இவர் ராமரா? அல்லது ராவணனா? என்றும் கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர். ஆதிபுருஷ் டீசர் அக்டோபர் 2ம் தேதி மாலை 7 மணியளவில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X