»   »  ராம் சரண்- காஜல் அகர்வால் நடிக்கும் ராம்லீலா

ராம் சரண்- காஜல் அகர்வால் நடிக்கும் ராம்லீலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மகதீரா ஜோடியான ராம்சரண் - காஜல் அகர்வால் தெலுங்கில் நடித்த கோவிந்துடு அந்தரிவாடலே படம் ராம்லீலா என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது.

இஃபார் இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக ரபி மதிரா தயாரிக்கும் படம் இது.

இந்தப் படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு சமீர்ரெட்டி, இசை யுவன் சங்கர் ராஜா.

கிருஷ்ண வம்சி இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு தமிழில் வசனம் எழுதியுள்ள ஷாஜி, படம் குறித்துக் கூறுகையில், "அப்பா பிரகாஷ்ராஜுக்கும் மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை பேரன் ராம்சரண் தீர்த்து வைத்து உறவு சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறான்.

இந்த குடும்பக் கதையை நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் பார்முலா படமாக கிருஷ்ணவம்சி உருவாக்கியுள்ளார். விரைவில் இப்படம் தமிழில் திரைக்கு வருகிறது," என்றார்.

தெலுங்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த ஆண்டு அதிகம் வசூலித்த தெலுங்குப் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ram Charan - Kajal Agarwal's 2014 Super hit movie Govindudu Andarivadele is releasing as Ramleela in Tamil.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil