ராம் சரணின் RC15 படப்பிடிப்பு முடிந்தது..நியூஸிலாந்து ஷெட்யூலை முடித்த ஷங்கர்!

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'RC 15' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது, பட்ஜெட் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து RC15 படத்தை இயக்கத் தொடங்கினார்.

இப்படத்தில், ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். அரவிந்த் சாமி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

ராம் சரண்

ராம் சரண்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பிறகு ராம்சரண், ஷங்கர் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர்களின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளதால், அவர்கள் நடிக்கும் படங்களும் பான் இந்திய படங்களாக வெளியாகி வருகின்றன. இப்படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரித்துள்ளார்.

இரட்டை வேடங்களில்

இரட்டை வேடங்களில்

ராம்சரணின் 15 திரைப்படமான இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தில் ராம் சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருப்பதாகவும். நடுத்தர வயது முதல் வயதானவர் வரை பல கெட்டப்புகளில் ராம்சரண் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு

இப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஷங்கர், ராம் சரண், நாயகி கியாரா அத்வானி, நடன இயக்குநர் போஸ்கோ கடந்த வாரம் நியூசிலாந்து சென்றிருந்த நிலையில், தற்போது பாடல் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு

இந்தியன்-2 படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கி உள்ள நிலையில், தற்போது RC 15 படப்பிடிப்பு முடிந்துள்ளதால், படக்குழுவினர் நாளை மறுதினம் சென்னை திரும்ப உள்ளனர். இதையடுத்து இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 5ந் தேதி சென்னை விமான நிலையத்தில் தொடங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X