ராஜமெளலி ரேஞ்சுக்கு புரமோஷனில் இறங்கிய ராம் கோபால் வர்மா.. கிரேட் காளியுடன் செம ஸ்டில்!

சென்னை: இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது புதிய படமான டேஞ்சரஸ் படத்தின் புரமோஷனை தீவிரமாக பல நகரங்களில் செய்து வருகிறார்.

Recommended Video

எனக்கு பெண்களை ரொம்ப பிடிக்கும்! Ram Gopal Varma Speech

சமீபத்தில் டேஞ்சரஸ் படத்தின் தமிழ் வெர்ஷனான காதல் காதல்தான் படத்திற்கான புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் கிரேட் காளியை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா.

ராஜமெளலி ரேஞ்சுக்கு

ராஜமெளலி ரேஞ்சுக்கு

இயக்குநர் ராஜமெளலி ரேஞ்சுக்கு ஒவ்வொரு மாநிலமாக சென்று இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் தனது புதிய படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷனை செய்து வருகிறார். ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் புரமோஷன் செய்த ராம் கோபால் வர்மா தற்போது டெல்லியில் டேஞ்சரஸ் படத்தை புரமோட் செய்து வருகிறார்.

காதல் காதல்தான்

காதல் காதல்தான்

பெண்களுக்கு இடையே மலர்ந்தாலும் அது காதல்தான் என்பதை உணர்த்தும் விதமாக லெஸ்பியன் படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. வரும் ஏப்ரல் 8ம் தேதி அந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அது தொடர்பான புரமோஷனை விறுவிறுப்பாக செய்து வருகிறார். எங்கே சென்றாலும், தனது படத்தின் நாயகிகளான அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலியை உடன் அழைத்துச் செல்கிறார்.

கிரேட் காளியுடன் சந்திப்பு

கிரேட் காளியுடன் சந்திப்பு

மல்யுத்த வீரர் கிரேட் காளியுடன் இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் டேஞ்சரஸ் அப்ஸரா ராணி எடுத்துக் கொண்ட செம மாஸான போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா டெல்லியில் புரமோஷனை ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டுள்ளார். டெல்லிக்கு நைனா கங்குலியை அழைத்துச் செல்லவில்லையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராம் கோபால் வெப்சீரிஸ்

ராம் கோபால் வெப்சீரிஸ்

ஒரு பக்கம் டேஞ்சரஸ் படத்தின் புரமோஷனை செய்து வரும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய வெப்சீரிஸான தகனம் தொடரின் டிரைலரையும் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மகாத்மா காந்தி சொன்னது மற்றும் மகாபாரதத்தில் இருக்கும் எதிர் எதிர் கருத்துக்களின் கலவை தான் இந்த வெப்சீரிஸ் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X