Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பதில்களால் தெரிக்கவிட்ட ராம்கோபால் வர்மா… அசந்து போன ரசிகர்கள்
ஹைதராபாத் : டேஞ்சரஸ் திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகளை மீண்டும் துவங்கியுள்ளார் இயக்குனர் ராம்கோபால் வர்மா.
ஹைதராபாத்தில் நேற்று நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் ராம்கோபால் வர்மா.
படத்தின் இரண்டு கதாநாயகிகள் ஆன நைனா கங்குலி மற்றும் அப்சரா ராணி உடனிருந்தனர்.
யுவன்
சங்கர்ராஜா
ரத்தமும்
சதையுமாக
இசையமைத்துள்ளார்..
பொம்மை
படம்
குறித்து
பகிர்ந்த
எஸ்
ஜே
சூர்யா

தடைப்பட்ட படம்
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த மாதம் எட்டாம் தேதி ரிலீசாக இருந்த டேஞ்சரஸ் திரைப்படம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. படம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து பரவலாக பேசப்பட்டது. ஆந்திராவில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சிலர் தங்களது திரை அரங்குகளில் டேஞ்சரஸ் திரைப்படத்தின் லெஸ்பியன் போஸ்டர் வைக்கப்படுவதால் அங்கே திரைப்படங்களை காண வரும் மக்கள் சங்கடபடுவதால் திரைப்படத்தை திரையிட மறுத்ததாகவும், தற்போது அது போன்ற போஸ்டர் அனைத்தையும் மாற்றி பொதுவான படத்தை போல போஸ்டர்ஸ் வைக்க திட்டமிட்டுள்ளதாக ராம்கோபால் வர்மா அப்போது ஒரு பேட்டியில் குறிப்பிட்டு, இதன்பிறகு இந்த படத்திற்கு பிரச்சனை இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார்.

படத்துக்கு கிரீன் சிக்னல்
டேஞ்சரஸ் படத்திற்கான பிரச்சினைகள் தீர்ந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் பிரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ள படக்குழு நேற்று ராம் கோபால் வர்மா மற்றும் இரண்டு கதாநாயகிகள் ஆனா நைனா கங்குலி மற்றும் அப்சரா ராணி பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களது கேள்விக்கு பதிலளித்துள்ளனர். எத்தகைய கேள்விக்கும் பதில் வைத்திருக்கும் ராம்கோபால் வர்மா பத்திரிகையாளர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்லியுள்ளார். ஒவ்வொரு கேள்விக்கும் ராம்கோபால் வர்மா பதிலளிக்கும்போது ரசிகர்களின் கர கோஷங்களால் அரங்கம் அதிர்ந்து போனது.

இது தான் வெற்றி
நேற்று நடைபெற்ற ' Ask me anything ' நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்த ராம்கோபால் வர்மா குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதிலாக " கல்லூரியில் தான் படிக்கும்போது பெண்களை பார்ப்பதற்கே பயமாக இருக்கும். அவர்களை அவர்களுக்கு தெரியாமல் ஓரக்கண்ணால் பார்ப்பேன். ஆனால் இன்று நான் அது போல் இல்லை. நைனா கங்குலி அப்சரா ராணி போன்ற பெண்களை வாழ்விற்கு தேவையான அளவு பார்த்து ரசித்து உள்ளேன். இது வெற்றி இல்லாமல் வேறென்ன " என அவர் பதிலளித்துள்ளார்.
Recommended Video

சமூகத்திற்கு இதில் எந்தக் கருத்தும் இல்லை
மனதில் பட்டதை எந்த பயமும் இல்லாமல் பேசக்கூடிய ராம்கோபால் வர்மா யார் மனதும் புண்படாமல் பேசக்கூடியவர் அல்ல. தான் இயக்கியிருக்கும் டேஞ்சரஸ் படத்தை பற்றி பேசும்போது " டேஞ்சரஸ் திரைப்படம் சமூகத்திற்கு ஏதோ மெசேஜ் சொல்வதற்காக எடுக்கப்படவில்லை. நேற்று ஏதோ நடந்துவிட்டது. நாளை ஏதோ நடக்கும். அதனால் இன்றைக்கு வாழ்ந்துவிட வேண்டும் என்பது என் பிலாசபி. என்னைவிட பணம் புகழ் கமர்ஷியல் சக்ஸஸ் பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கலாம். ஆனால் அவர்களைவிட நான் அதிகமாகவே எனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து வருகிறேன்." என பதிலளித்துள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கிய டேஞ்சரஸ் திரைப்படம் மே 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.